பக்கம்:ரமண மகரிஷி.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என். வி. கலைமணி

21



ஒரு முறைக்கு இருமுறை அந்தப் பாடத்தை எழுதினான்! அவனுக்கே ஒரு சலிப்பு! எத்தனை முறை இவ்வாறு, எழுதுவது என்ற சோம்பல்! அதனால் உடனே எழுந்து சற்று அங்குமிங்கும் நடமாடி மீண்டும் அமர்ந்து மூன்றாம் முறையாகப் பாடத்தை எழுதத் துவங்கியபோது மறுபடியும் ஏதோ ஒரு சிந்தனையிலே ஆழ்ந்து போனான்.

கண்களை மூடிக் கொண்டு, வாய் எதையோ முணு முணுத்துக் கொண்டிருக்கும் தனது தம்பியின் காட்சியைக் கண்ட அவரது அண்ணன் நாகசாமி, அப்போது அந்த நிலையைக் கண்டு, என்ன செய்கிறான்? என்ன முணுமுணுப்பு இவனுக்கு? என்று சிறிது நேரம் தம்பி எதிரிலேயே நின்று கொண்டிருந்தார்! மூடிய கண்களையும், வாய் முணுமுணுப்பையும் நிறுத்தாத தனது தம்பியைக் கண்டு கோபம் கொண்டார் அவர்.

வெங்கட்ராமா! என்னடா செய்கிறாய்? என்று கூச்சலிட்டார். அண்ணனது கோபக் குரலைக் கேட்ட தம்பி, ஏதும் பதில் கூற முடியாமல் ஊமையாகவே உட்கார்ந்து கொண்டிருந்தான்.

தம்பி, படிப்பான்! தந்தைப்போல வழக்கறிஞராவான்; குடும்பம் முன்னேறும் என்றெல்லாம் திட்டமிட்ட நாகசாமிக்கு, தம்பி புத்தகத்தைப் பிரித்து வைத்து விட்டு என்னமோ முணுமுணுக்கிறானே என்று ஆத்திரம் அடைந்து கல்வியில் கவனமில்லாத உனக்கு என்ன வேலை வீட்டில்? உதவாக்கரை, உதவாக்கரை என்று திட்டிவிட்டு மீண்டும், உதவாக்கரைகளுக்கு வீட்டில் வேலையில்லை என்ற கொந்தளித்தார்.

வீட்டில் என்ன வேலை? என்ற அண்ணனுடைய சொல் வெங்கட்ராமன் நெஞ்சிலே நெருப்பைக் கொட்டி விட்டது. அப்போது தந்தையற்ற நிலையையும் தமையனுடைய எரிமலைச் சொற்களையும் குறித்து அவன் நீண்ட நேரமாகச் சிந்தித்தபடியே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரமண_மகரிஷி.pdf/23&oldid=1280141" இலிருந்து மீள்விக்கப்பட்டது