பக்கம்:ரமண மகரிஷி.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

ரமண மகரிஷி


அமர்ந்திருந்தான். அப்போது பதினைந்து வயதுடைய சிறுவனானதால் அவன் மீண்டும் மீண்டும் குழம்பிக் கொண்டே இருந்தான்.

அப்போது சுந்தரமய்யருடைய நண்பர் ஒருவர் சுப்பய்யர் வீட்டுக்கு வந்தார். அவரை வரவேற்ற வெங்கட்ராமன், எங்கிருந்து போகிறீர்கள்? என்று விசாரித்தான்.

வந்தவர் ‘அருணாசலத்தில்’ இருந்து என்றார்.

‘என்ன! ஒரு அருணாசலமா? எப்போதோ கேட்ட பேராக இருக்கிறதே அது!’ என்று அவன் தனக்குத்தானே ஒரு மகிழ்ச்சி கொண்டான். இந்தப் பெயர் ஒன்றும் அவனுக்குப் புதியது அல்ல. ஏனென்றால், சுந்தரமய்யர் அந்தப் பெயரைப் பலமுறை சொல்லக் கேட்டிருக்கிறான்! அவ்வளவு ஏன்? சிவநேசர்கள் பெரும்பாலும் அருணாசலத்தைப் பற்றிப் பாடக் கேட்டிருக்கிறான்!

எனவே, அந்த நினைவுகளை எல்லாம் மீண்டும் மீண்டும் அவன் எண்ணியெண்ணி யோசித்து, வீட்டுக்கு வந்த அந்தப் பதியவரைப் பார்த்து, ‘ஐயா, அருணாசலம் என்கிறீர்களே, எங்கே இருக்கிறது அந்த அருணாசலம்?’ என்று கேட்டான் வெங்கட்ராமன்!

வந்தவர் அந்தப் பதினைந்து வயது பையனைப் பார்த்து, ‘அது போகட்டும். சுப்பய்யர் இருக்கிறாரா?’ என்று கேட்டார்! உடனே அவன், ‘அவர் வெளியே சென்றுள்ளார். மாலைதான் வருவார்’ என்று அவசரமாகப் பதிலைச் சொல்லிவிட்டு, ‘ஐயா, எங்கே உள்ளது அருணாசலம்?’ என்று மீண்டும் கேட்டான்.

‘என்ன தம்பி, இது கூடவா உனக்குத் தெரியாது. திருவண்ணாமலை என்ற ஊரைப்பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறாயா? அங்கேதான் அருணாசலம் இருக்கிறது’ என்றார் வந்தவர்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரமண_மகரிஷி.pdf/24&oldid=1280143" இலிருந்து மீள்விக்கப்பட்டது