பக்கம்:ரமண மகரிஷி.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

ரமண மகரிஷி




1896-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் ஆரம்பவாக்கில், திட உடலோடு இருந்த வெங்கட்ராமனுக்குள் திடீரென ஒரு பலவீனம் புகுந்தது; நெஞ்சுள் அச்சம் குடியேறியது. என்ன காரணம் அச்சத்துக்கு என்று அவனால் கண்டு பிடிக்க முடியவில்லை. ஆனால், திடீர் திடீர் என்று அவனுக்குள் ஒரு திகில் உண்டாகும். உடல் சோர்ந்து விடுவான் வியர்த்துக் கொட்டும் மயங்கி விழுந்து விடுவான் வெங்கட்ராமன்! அதுஎன்ன?

அது என்ன என்ற விவரத்தை மகான் ரமண மகரிஷியே பிற்காலத்தில் கூறியுள்ளார்.

“நான் சாகப் போவதாய் எனக்குள் ஒரு பயம் உண்டாயிற்று. புலன்கள் ஓய்ந்து கொண்டிருக்கின்றன. திகிலை நான் நன்றாக உணருகிறேன். ஆனால், உடலில் எவ்வித மாறுதலும் புலப்படவில்லை. இவ்வாறு நான் ஏன் பயம் கொள்கிறேன் என்று சிந்தித்தேன். சிந்திக்கச் சிந்திக்க அந்த அச்சத்தின் காரணம் எனது அறிவுப் பிடியுள் அகப்படாமலேயே நழுவிக் கொண்டே இருந்தது. ஆனாலும், நான் ஏன் பயப்படுகிறேன்? அவ்வாறு அஞ்சுவது முறையாகுமா? என்ற கேள்விக்கும் எனக்குப் பதில் கிடைக்கவில்லை. மற்றவர்களையாவது கேட்கலாமா? என்ற ஆசையும் எனக்குள் உண்டாகவில்லை. இந்தப் பயத்தை நானே செய்வதென மனத்தில் முடிவு செய்து கொண்டேன். நான் அந்தச் சமாதானத்தைத் தேட முற்பட்டேன்.”

“அப்போது ஹிருதயத்தில் எண்ணங்களின் நடமாட்டம் மிகவும் கடுமையாகிறது. மரண பயமும், அதன் நுகர்ச்சியும் ஒரே நேரத்தில் நடந்தன. என் உடல் மரத்துப்போகும். மூச்சும் தடையுறும் உதடுகள் தாமாகவே இறுகும். வாயிலிருந்து சிறு சத்தங்கூட அப்போது வெளிவராது. என் உடம்பு பிணம்போல் அங்கே கிடந்தது.

“இதில் வியப்புக்குரிய செய்தி என்னவென்றால், என்னுடைய மனோ விருத்திகள் முன்னைப் போன்றே மாறாமல் இருந்தன. சாகும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரமண_மகரிஷி.pdf/26&oldid=1280163" இலிருந்து மீள்விக்கப்பட்டது