பக்கம்:ரமண மகரிஷி.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என். வி.கலைமணி

25


விதம் இதுதான் என்று புரிந்து கொண்டேன். உடல் ஒரு கட்டை போல் கிடப்பதை அறிந்தேன். இதை மக்கள் சுடுகாட்டுக்குத் தூக்கிக் கொண்டு போவார்கள். சற்று நேரத்தில் இது எரிந்து நீறாகிவிடும் இந்நிலையிலும், ‘நான்’ ‘எனது’ என்ற உணர்வு முன்போலவே இருந்தது. சரீரம் மரம் போல் தரையில் கிடக்க, நான் இருக்கிறேன் என்ற உணர்வு அழியாமல் இருப்பது ஆச்சரியம் அல்லவா? சாவும் ஒரு கனவு போலத்தான் என்பதை நான் புரிந்து கொண்டேன்.”

மரண அனுபவத்தை உயிரோடு இருக்கும்போதே அந்தச் சிறுவன் வெங்கட்ராமன் பெற்றான். ஒரு மனிதன் செத்த பிறகும் கூட ஏதோ சக்தி உள்ளது. அந்தச் சக்தியே ஆத்மா என்பதை வெங்கட்ராமன் உணர்ந்தான்.

இது அனுபவத்தால் அறிந்த உண்மை, அவன் அடிக்கடி இந்த உண்மையைச் சிந்திக்கிறான். அந்தச் சிந்தனையால் அவனது எண்ணங்கள் உறுதி பெற்றன. எண்ணியவற்றை எண்ணி எண்ணி அது திண்மை பெறுமாயின் அதைப் பெறக் கூடும் அல்லவா? அதற்காகவே வெங்கட்ராமன் மேலும் மேலும் சிந்தித்துக் கொண்டே இருந்தான்.

சிந்தனை செய்யும் போது மட்டுமன்று, வெங்கட்ராமன் எப்போதும், எங்கும் தனிமையிலேயே இருக்க ஆசைப்பட்டான். அவ்வாறே அவனும் ‘தனித்திரு’ என்ற வள்ளலார் சித்தாந்தத்தின் படியே வாழ்ந்து வந்தான். காணவந்த நண்பர்களிடமும் அவன் எதையும் பேசமாட்டான். அத்தகையவனை நண்பன் எவனாக இருந்தாலும் நாடுவானா? எனவே, நண்பர்களது பிரிவும் அவனுக்கு உருவானது.

அடுத்தபடியாக, அவன் எவ்வளவு பிரியமாக, நண்பர்களோடு விளையாடுவானோ, அந்த ஆட்டங்களை எல்லாம் அறவே அவன் மறந்து விட்டான். நாளுக்கு நாள் சிந்தனை பலமாயிற்று? குறும்பும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரமண_மகரிஷி.pdf/27&oldid=1280164" இலிருந்து மீள்விக்கப்பட்டது