பக்கம்:ரமண மகரிஷி.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26

ரமண மகரிஷி


குத்தலும் கூத்தும், வம்பும், வாதுமாக தெம்பாகக் குதித்தவன், இப்போது அந்த எண்ணமே எழாதவன் போலாகிவிட்டான். அவ்வளவு தூரம் அவனது மனம் மாறி விட்டது. அதாவது, அவனிடம் முன்பிருந்த அகந்தை, ஆணவம், அத்தனையும் அழிந்தது.

சிறு சிறு பிரச்சினைகளுக்காக எல்லாரிடமும் சண்டை சச்சரவுகளை உருவாக்கும் மனோபாவம் கொண்டவன். இப்போது இந்தப் பூனையும் பால் குடிக்குமா? என்ற எண்ணத்திற்கு எடுத்துக் காட்டாகி விட்டான். அவ்வளவு தூரம் அவன் பசுப்போல், சாதுவாகக் காட்சி தந்தான்; இப்போது அடுத்தவர்களிடம் பேசுவதே தேவையற்ற செயல் என்று நடந்து கொள்கிறான்.

இதற்கு முன்பெல்லாம், அவன் கோயிலுக்குப் போகவே வெறுப்படைவான்! அத்தகையவன் இன்று தினந்தோறும் திருவண்ணாமலை பஜனை பாடுகிறான்! அருணாசலம் நாமாவளி இசைக்கின்றான்! மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலே கதியெனக் கிடக்கின்றான். அங்குள்ள சிலைகளைத் தெய்வீகக் கலை வடிவங்கள் என்று புகழஞ்சலி செய்து போற்றுகின்றான். வெங்கட்ராமனுடைய இயல்பான குணங்களும், சுபாவங்களும், மறைந்து விட்டன.

என்று சேக்கிழார் பெருமானுடைய பெரிய புராண விரிவுரையை மீனாட்சி சுந்தரேஸ்வரரின் கோயிலில் கேட்டானோ, அன்று முதல் வெங்கட்ராமன் சிவபெருமான் சன்னதியிலே அமர்ந்து கொண்டு, தேவார திருவாசகங்களை ஓதும் போது, அவன் கண்களிலே நீர் வழி நீர்ந்து சிதறி சிந்தும் பக்தி உணர்ச்சி கண்டு பக்தர்கள் பிரமிப்படைவார்கள்.

வெங்கட்ராமன் என்ற சிறுவனுடைய அப்போதைய மனோபாவ நிலையை நாம் எழுதுவதைவிட, அதே சிறுவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரமண_மகரிஷி.pdf/28&oldid=1280165" இலிருந்து மீள்விக்கப்பட்டது