பக்கம்:ரமண மகரிஷி.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

ரமண மகரிஷி



கோபம் கொள்ள முடியுமா என்ன? அவர் கூறியது முழுக்க முழுக்க நியாயந்தானே!”

“கல்வியில் கவனம் செலுத்தாத உதவாக்கரைகளுக்கு எவராவது வீட்டில் இடம் கொடுப்பார்களா? சோற்றுக்கும் பாரமாய், வாழ்க்கைக்கும் பாரமாய் இருப்பதா ஒரு பிள்ளைக்கு அழகு? அவனால் வீட்டுக்கும் பலனில்லை; நாட்டுக்கும் பிரயோசனமில்லை. அப்படிப்பட்டவன் வீட்டில் இருக்கலாமா? இதைத்தானே அண்ணன் நாகசாமி கேட்டார்? அவர்மீது என்ன தவறு?”

என்று மனம் சலித்தவனாய், விரக்தியோடு, தமையன் திட்டியதிலே உள்ள நியாயத்தையும் உணர்ந்து, ஆண்டவனே என்னுடைய எதிர்காலம் இப்படியா அலைமோத வேண்டும்? உன்னைத் தவிர எனக்கு வழிகாட்டும் கருணையாளர் யார்? உன்னை விட்டால் எனக்கு வேறுகதி யார்? கடவுளே, இனிமேலும் மானமுள்ள ஓர் உதவாக்கரை வீட்டில் இருப்பானா? என்றவாறே வெங்கட்ராமன் தனது கண்களை மீண்டும் மூடி தியானத்தில் ஆழ்ந்து விட்டான். அப்போது அருணாசலேஸ்வரர் அவனுக்கு ஏதோ அருள் பாவிப்பது போன்ற ஒரு நிழலாட்டம் காட்சி தந்தது.

தியானம் கலைந்து அவன் கண் விழித்த போது, மீண்டும் அன்ணன் நாகசாமியே எதிரிலே நின்று கொண்டிருந்தார். ‘ஏண்டா பள்ளிக்கூடம் போகவில்லையா?’ என்ற அதட்டும் குரலிலே அவர் தம்பியைக் கேட்டார்.

‘போக வேண்டும் அண்ணா! பன்னிரண்டு மணிக்கு இன்று வகுப்பு’ என்றான் வெங்கட்ராமன்!

உடனே, நாகசாமி அன்பான குரலில் ‘வெங்கட்ராமா! அப்பாவும் இல்லை, நமக்கு யார் கதி! உனக்கு நானும் எனக்கும் நீயும்தானே! கல்வியை நீ கவனமாகப் படித்தால்தானே, தாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரமண_மகரிஷி.pdf/30&oldid=1280170" இலிருந்து மீள்விக்கப்பட்டது