பக்கம்:ரமண மகரிஷி.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என். வி. கலைமணி

29


அப்பாவின் பெயரைக் காப்பாற்றிக் கௌரவமாக வாழமுடியும்? உனக்கு இது தெரிய வேண்டாமா? சரியாக நீ படிக்கவில்லையே என்ற கோபத்தால் அல்லவா உன்னைத் திட்டிவிட்டேன்!’

‘சரி சரி போகட்டும் எதையும் மனத்தில் வைத்து வருத்தப்படாதே! கீழே பெட்டி மேலே ஐந்து ரூபாய் வைத்திருக்கிறேன். அதை எடுத்துக் கொண்டு, எனது கல்லூரிக்குப் போ, எனக்கு என்ன சம்பளமோ அதைக் கட்டி விட்டு, பிறகு உனது பள்ளிக்கூடத்துக்குப் போ, தம்பி!’ என்று நாகசாமி தனது தம்பியை ஆறுதல் கூறி, தேற்றி கீழே அனுப்பி வைத்தார்!

‘சரி அண்ணா’ என்ற மகிழ்ச்சியோடு தம்பி வெங்கட்ராமன் அண்ணனிடமிருந்து விடைபெற்றுக் கீழே வந்தான். பெட்டிமேலே அண்ணன் சொன்ன ஐந்து ரூபாய் அப்படியே இருந்தது. அதில் மூன்று ரூபாயை எடுத்துக் கொண்டான். இரண்டு ரூபாயை அண்ணன் வைத்திருந்த இடத்திலேயே வைத்தான்.

தனக்குத் தேவையான மூன்று ரூபாயை மட்டும் எடுத்துக் கொண்டான் வெங்கட்ராமன். ஒரு கடிதத்தில், ‘அண்ணா உங்களுடைய எண்ணப்படி உதவாக்கரையான நான் வீட்டை விட்டுப் போகிறேன். இனிமேல் என்னைத் தேடி அலைய வேண்டாம். தங்கள் பணம் இரண்டு ரூபாயை இந்தக் கடிதத்தின் மேலே வைத்திருக்கிறேன். எடுத்துக் கொள்ளவும்.’ என்று எழுதி வைத்து விட்டு, அமைதித்தேடி 1896-ஆம் ஆண்டு, ஆகஸ்டு மாதம் 26- ஆம் நாள் வீட்டை விட்டு அவன் வெளியேறி நடந்து கொண்டே இருந்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரமண_மகரிஷி.pdf/31&oldid=1280303" இலிருந்து மீள்விக்கப்பட்டது