பக்கம்:ரமண மகரிஷி.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6. பிச்சை எடுத்த
அன்னதானப் பிரபு

நாகசாமி வைத்திருந்த ஐந்து ரூபாயில், வெங்கட்ராமன் மூன்றே மூன்று ரூபாயை மட்டும்தான் எடுத்துக் கொண்டான். அவன் நினைத்திருந்தால் ஐந்து ரூபாயையும் கூட எடுத்துக் கொண்டு போயிருக்கலாம் ஆனால் எடுக்கவில்லை.

“அண்ணா, நான் அருணாசலத்தைத் தேடி, எனது கருணாமூர்த்தி வாழும் இடமான திருக்கோவிலுக்குப் போகிறேன். என்னைத் தேடி அலையவேண்டாம்; பணம் காசுகளை வீணாகச் செலவு செய்ய வேண்டாம். என்னைப் பற்றி உங்களுக்கு எந்தக் கவலையும் தேவையில்லை.” இத்துடன் குறிப்பு ஒன்றையும் எழுதி வைத்திருந்தான் என்ன குறிப்பு அது?

வேறொன்றுமில்லை. தனது தமையன் நாகசாமி கல்லூரியில் சம்பளம் கட்டுவதற்காக வைத்திருந்தபணத்தில் தானே வெங்கட்ராமன் மூன்று ரூபாயை எடுத்தான். அதனால் தனது அண்ணனுக்கு சம்பளம் கட்டப்படவில்லை என்ற உண்மையை உள்ளது உள்ளபடி எழுதி வைத்துவிட்டுச் சென்ற தனது தம்பியின் நடத்தையை, நாணயத்தைக் கண்டு அண்ணன் மிகவும் பாராட்டினார். ஆனால், அவர்தான் கடிதம் எழுதினார் என்பதற்கான கையெழுத்தை அவர் போடவில்லை. அதற்குக் காரணம், அவர் எங்கோ புறப்படப் போகிறோம் என்ற பரபரப்பாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரமண_மகரிஷி.pdf/32&oldid=1280699" இலிருந்து மீள்விக்கப்பட்டது