பக்கம்:ரமண மகரிஷி.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என். வி. கலைமணி

45




இவ்வளவு சிறப்புக்களைப் பெற்று பிற்காலத்தில் இந்தக் கோயில் பேரும் புகழும் பெற்று விளங்கிக் கொண்டிருக்கிறது என்றால், அதற்கு மூல காரணமும் - முதல் சிந்தனையும் தோற்றுவித்தவர் பகவான் ரமண மகிரிஷிதான்.

இத்தகைய பெருமையுடன் இன்றும் மக்கள் போற்றி வரும் இடம்தான், ரமணர்-வெங்கட்ராமனாக திருவண்ணாமலைக் கோயிலுக்குள் நுழைந்தபோது, பூசைகள், வழிபாடுகள் ஏதும் நடைபெறாத பாழ்பட்ட இடமாக இருந்தது. அந்தப் பாதாளக் கோயில் உள்ளே எப்போதும் ஒரே இருள் கவ்விக் கிடக்கும். வெளவால் புழுக்கைகள், துரிஞ்சல் எச்சங்கள், சிறுநீர்கள், சிலந்திக் கூடுகள் எல்லாம்பெருகி, ஒரே நாற்றமடித்த இடமாக அது இருந்தது. எனவே, சுருங்கக் கூறுவதானால், அந்தப் பாதாளக் கோயில் புழு, பூச்சிகள், பாம்பு, தேள்கள் ஆடசி செலுத்தும் இடமாக இருந்தது.

அப்படிப்பட்ட ஒரு நரகம் போன்றிருந்த, இருள் கவ்விய இடத்தைத்தான், வெங்கட்ராமன் என்ற அந்தச் சிறுவன் தனது தியான சாதனைகளுக்கான இடமாகத் தேர்ந்தெடுத்தான். அங்கே இருந்த மேடை மீது உட்கார்ந்து கொண்டு, கண்களை மூடிக் கொண்டு தியானங்களைச் செய்து வந்தான் வெங்கட்ராமன்.

தியானம் கலைந்ததும், அந்தச் சிறுவன் அங்கும் இங்குமாக நடப்பார். எதிர்பாராமல் யாராவது அங்கு வந்து உண்பதற்காக ஏதாவது ஆகாரம் கொடுத்தால்தான் சாப்பிடுவாரே தவிர, எவரிடமும் போய் கெஞ்சிக் கேட்கமாட்டார். பட்டினத்துத் துறவியார் கூறியதைப் போல இருக்கும் இடம் தேடி சிறுவனுக்கு உண்ண உணவு வரும்.

வெங்கட்ராமன் தான் உலகைத் துறந்தார். உலகம் அவரை அவ்வளவு எளிதாக விட்டுவிடுமா? அதுவும் பழநியாண்டி முருகனைப் போலக் கோவணதாரியாக ஒரு பையன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரமண_மகரிஷி.pdf/47&oldid=1280713" இலிருந்து மீள்விக்கப்பட்டது