பக்கம்:ரமண மகரிஷி.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46

ரமண மகரிஷி


உட்கார்ந்திருப்பதால், அவனைப் போன்ற வயதுப் பையன்கள் விட்டுவிடுவார்களா சும்மா?

அவர்கள் கூட்டமாக வந்து கேலி செய்தார்கள் ஏய் கோவணாண்டி என்று கூப்பிடுவார்கள். ‘கோமணம் கட்டிக்கிட்டு வெட்கமில்லாமல் உட்கார்ந்திருக்கிறான் டோய்’ என்பார்கள். சிலர் கல்லாலடிப்பார்கள்; வேறு சிலர் அவன் பைத்தியண்டா என்று கெக்கலிட்டுக் கொட்டுவார்கள். இன்னும் சிலர் ‘பைத்தியம் பைத்தியம்’ என்று கைகொட்டி பழித்துக் கிண்டலும் கேலியும் செய்வார்கள். வேலையற்றதுகளுக்கு இதுவே ஒரு வேலை என்று எண்ணி தினந்தோறும் வந்து வெங்கட்ராமன் தியானத்தைக் கலைத்துக் குறும்பாட்டம் ஆடுவார்கள்.

இவற்றையெல்லாம் கண்ட வயது முதிர்ந்தவர்கள் வெங்கட்ராமனிடம் இரக்கம் காட்டுவார்கள். மற்றும் சிலர் பரிவோடு அவரைப் பால சந்நியாசி என்று அன்போடு அழைத்து பயபக்தியோடு எண்ணி அவருக்குத் தொண்டு செய்வார்கள். அதனால் எல்லாம் தியானம் கலைவதால், வேறு ஓரிடமான பாதாளலிங்கம் இருக்கும் இடத்துக்கு மாறிச் சென்று தியானம் புரிவார் வெங்கட்ராமன்.

பாதாள லிங்கக் கோயில் எப்படிப்பட்ட இடம் என்பதை முன்னே விளக்கியிருந்தோம் அல்லவா? வேறு வழி ஏதும் புலப்படாத அந்தப் பாலயோகி, அதே இடத்துக்கே சென்று தியானம் செய்திடும் நிலை உருவானது.

பாதாள அறை, பூச்சி புழுக்களது நாற்றமும், அவற்றின் நடமாட்டமும் அதிகமாக உள்ள இடம். பாம்புகள் கூட அந்த இடத்திலே பஞ்சணை கொண்டிருக்கும். தேளும், சிலந்திகளும் ஒன்றுடன் ஒன்று போராடி வரும் களம் அது. இவற்றை எல்லாம் கவனிக்க அந்த பாலயோகிக்கு நேரமேது? எது என்ன செய்தாலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரமண_மகரிஷி.pdf/48&oldid=1280716" இலிருந்து மீள்விக்கப்பட்டது