பக்கம்:ரமண மகரிஷி.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என். வி. கலைமணி

47


அதை அவர் கவனியாமல் அவற்றுக்கு முக்கியத்துவம் தராமல், சிலைபோல அமர்ந்து தானுண்டு, சிவமுண்டு, தியானமுண்டு, சித்தவடக்கம் உண்டென்று இருப்பார்.

சும்மா இருக்குமா பாதாள அறைப் பூச்சிகளும், வௌவால்களும், புழுக்களும்? வெங்கட்ராமளை அவை ஒவ்வொன்றாக வந்து கடித்தன; அவன் மேலே ஏறி ஊர்ந்தன. வௌவால் படபட வென்று சிறகடித்து ஆசைகளை எழுப்பியபடியே இருந்தன. சிறுவனது சிந்தனையோ சிறகடித்துக் கொண்டிருந்தன.

பாலசந்நியாசி தனது மனத்தைத் தளர விட்டாரில்லை. எப்படியும் அருணாசலத்தைக் காண வேண்டும் என்ற தவ வேட்கையோடு உட்கார்ந்தது உட்கார்ந்தபடியே கொள்கைக் குன்றாக அவர் இருந்துவிடுவதால், பூச்சிகள் கடிக்கும் வலியும், அதனால் ஏற்படும் புண்களும் ரத்தமும், சீழ்வகைகளும், அரிப்பும், தழும்புகளும், காயங்களும் அவரை ஒன்றும் செய்யவில்லை. அவ்வளவவு மனோபலத்தோடு தவமும், தியானமும் செய்து கொண்டே இருந்தார் அந்த பாலயோகி.

பாலயோகி வெங்கட்ராமனுடைய தவநிலையையும் தியான ஒழுக்கத்தையும் கண்ட ரெத்தினம்மாள் என்ற ஒரு பண்பாள, பெண் சின்ன சாமியார் போல அமர்ந்திருக்கும் அந்தச் சிறுவயதுப் பையனது தோற்றத்தைப் பார்த்துப் பரிதாபமடைந்து, ‘என்னுடைய வீட்டுக்கு வாருங்கள், தனிமையான இடம் உள்ளது. எந்தவித புழு பூச்சிகளது தொல்லைகளின்றி, அமைதியாகத் தவம் புரியலாம்’ என்று இளம் துறவியை அழைத்தாள்.

சாமி, வாய்திறந்து பேசும், பதில் சொல்லும் என்று அந்தப் பெண் வெகு நேரம் காத்திருந்தாள். வெங்கட்ராமன் அவள் பேச்சைக் கேட்டுக் கொண்டதாகவே காட்டிக் கொள்ளவில்லை. வாய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரமண_மகரிஷி.pdf/49&oldid=1280718" இலிருந்து மீள்விக்கப்பட்டது