பக்கம்:ரமண மகரிஷி.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என். வி. கலைமணி

53


குருமூர்த்தத்துக்கே வந்து விட்டதால், அன்று முதல் அந்த சின்னசாமி குருமூர்த்தசாமி என்று மக்களால் அழைக்கப்பட்டார்.

குருமூர்த்த சாமி புதிய இடம் மாறி வந்து தங்கி தவத்தில் மூழ்கினார்! தியானத்தின் ஐம்புலனாற்றல் ஒளி ஊடுருவ ஊடுருவ சந்நியாசி தனது உடலையே மறந்தார். அவருக்கு தலைமயிர் சடைத்தது. கை, கால் விரல் நகங்கள் எல்லாம் நீண்டு வளர்ந்தன.

பாதாள அறையிலேயும், ஆயிரங்கால் மண்டப மேடையிலேயும் கல்லையும், மண்ணையும் வாரி எறிந்து கொண்டிருந்த குறும்பர்களின் தொல்லைகள் இல்லை என்றாலும், அவர்களை விட மோசமாக, நினைத்த நேரங்களிலே எல்லாம் கடித்துக் கொண்டே இருக்கும் எறும்புத் தொல்லை மிக மோசமாக இருந்தது. இருந்தாலும், பாலயோகி அதையெல்லாம் பொருட்படுத்தவில்லை.

இளம் சந்நியாசி எறும்புக் கடிகளுக்கு ஆளாகி அவதிப்படுவதைக் கண்ட ஒரு ஆன்மிக அன்பர், அவரை ஒரு பெஞ்ச் மீது உட்கார வைத்தார். அதன் நான்கு பக்கக் கால்களிலும் தண்ணீர்ப் பாத்திரங்களை வைத்தார். இதனால் பாலயோகி அமர்ந்துள்ள பெஞ்ச் மீது எறும்பகள் ஏறுவது தடுக்கப்பட்டது. ஆனால் அந்தத் துறவி பெஞ்சின் பின்பக்கம் சுவரில் சாய்ந்து கொள்வார். அதன்மீது எறும்புகள் ஏறி அவருக்குத் தொல்லைகளைக் கொடுத்துக் கொண்டே இருக்கும். இளம் சந்நியாசி அந்தச் கவர்மீது சாய்ந்து கொண்டிருந்த உடல் அடையாளத்தை அங்கே இன்றும் கூட காணலாம்.

ஒரு சிறு வயதுப் பையன் அன்ன ஆகாரம் மறந்து, தன்னை மறந்து, ஐம்புலன் ஆற்றலை வென்று தவம் செய்கிறான் என்று ஒருவர் மற்றொருவரிடம் பிரசாரம் செய்தால் போதாதா? உடனே அவை காட்டுத் தீ போலப் பரவி விடுமல்லவா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரமண_மகரிஷி.pdf/55&oldid=1280741" இலிருந்து மீள்விக்கப்பட்டது