பக்கம்:ரமண மகரிஷி.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56

ரமண மகரிஷி


 செயல்களின் பெருமைக்குரிய நிகழ்ச்சிகளைக் கண்ட பக்தகோடி மக்கள் அவரை வெங்கட்ராம ரிஷி என்றே அழைத்து மன நிறைவைப் பெற்று வந்தார்கள் எனலாம்.

பால துறவியான வெங்கட்ராமனைப்பற்றிக் கவிஞர்கள் எழுதும் போற்றிப் பாடல்களும், கல்விமான்கள் கற்பிக்கும் அருட்சம்பவங்களும், அண்ணாமலைத் தம்பிரான் செய்யும் பாலாபிஷேக, தூப தீபங்களும் ரமணருக்கு மன அதிருப்தியை உண்டாக்கியது. இவையெல்லாம் அவருக்குப் பிடிக்கவில்லை. அதுவும் குறிப்பாக, தம்பிரான் செயல்களை அவர் அறவே வெறுத்தார். என்ன செய்வது எல்லாவற்றையும் அவர் பொறுத்துக் கொண்டாரேயன்றி, ஏற்றுக் கொண்டவரல்லர்.

ஒரு நாள் குன்றக்குடி மடாதிபதியான அண்ணாமலைத் தம்பிரான் வீதி வீதியாகப் பிச்சை எடுத்துக் கொண்டு குருமூர்த்தத்துக்குத் திரும்பினார். அப்போது வெங்கட்ராமர் அவரைப் பார்த்து என்ன சொன்னார் தெரியுமா?

“இந்த உடலுக்கு உணவுதான் வேண்டும். இது மிகச் சிறிய விஷயம் தான் என்றாலும், அதற்குப் பிறகு, தம்பிரானும் மனம் மாறினார். பிச்சை எடுத்து வந்து உண்ணும் பழக்கத்தை அவர் அன்று முதல் கைவிட்டார்.

நாளுக்கு நாள் வெங்கட்ராம ரிஷியைப் பார்க்க வரும் கிராம மக்கள், நகரவாசிகள் கூட்டம் அதிகரித்தவாறே இருந்தது. அதை ஓரளவுக்குக் கட்டுப்படுத்த வேண்டுமே என்று எண்ணியவர்கள். அவர் தங்கியிருந்த இடத்தைச் சுற்றி நான்கு புறமும் தடுப்பு வேலி போட்டார்கள். அதனால் கூட்டம் தரும் தொல்லைகளும் ஓரளவு குறைந்தன.

பெருகி வந்த மக்கட் கூட்டம் பாலயோகி வெங்கட்ராமருக்கு சில அன்பளிப்புப் பொருட்களை வழங்கி வந்தன. அந்தப் பால்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரமண_மகரிஷி.pdf/58&oldid=1280771" இலிருந்து மீள்விக்கப்பட்டது