பக்கம்:ரமண மகரிஷி.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



9. இரமணரின் தொண்டர்கள்

ரமண மகரிஷி குன்றக்குடி மடமான குருமூர்த்தத்திற்கு வருகை தந்த இரண்டே மாதங்களில் அண்ணாமலை தம்பிரான் தனது மடத்து வேலையாக வெளியூர் செல்ல நேர்ந்தது. ஒரு வாரத்தில் அவர் மீண்டும் திருவண்ணாமலைக்குத் திரும்பி விடுவதாக இரமணரிடம் வாக்களித்து விட்டுச் சென்றார்.

இரமணரை தான் எப்படிக் கவனித்துக் கொண்டாரோ தம்பிரான், அதுபோலப் பாதுகாத்துப் பணிவிடையாற்றும் பொறுப்பை, அவர் நாயனார் என்பவரிடம் ஒப்படைத்து விட்டுப் போனார்.

தம்பிரான் ஒப்படைத்த பொறுப்பைப் போற்றி வந்த நாயனாருக்கு அவரது மடத்திலே இருந்து வந்த அழைப்பை ஏற்றுப் போக வேண்டிய கட்டாயம் உருவானது. காரணம், நாயனாரும் ஒரு மடத்திற்குப் பொறுப்பாளராக இருந்ததுதான். அதனால் இப்போது, யார் ரமணருக்குத் தொண்டாற்றுவது?

திருவண்ணாமலையில் உள்ள அய்யங்குளம் தெருவில் ஒரு விநாயகர் கோவில்! அக் கோவிலின் பூசாரியாக இருந்தவர் பழனிச் சாமி என்ற சாமியார். அங்கே பூசைப் பணிகளைப் புரிந்து கொண்டு அவர் தனது வாணாளை நகர்த்தி வந்தார். ஒரே ஒரு வேளை உப்பில்லாத உணவை உண்பார்! அவ்வளவுதான்.

இவ்வாறாக இருந்த பழனிச்சாமி பூசாரியைக் கண்ட ஒரு விநாயக பக்தர், "கல்லுப் பிள்ளையார் மீது இவ்வளவு கவனம் செலுத்தும் நீர், உயிரோடு உள்ள ஒரு பிராமண சாமியாரைக் கவனிக்கவில்லையே!" என்று கூறினார் அவர் பெயர் சீனிவாச அய்யங்கார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரமண_மகரிஷி.pdf/60&oldid=1280779" இலிருந்து மீள்விக்கப்பட்டது