பக்கம்:ரமண மகரிஷி.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என். வி. கலைமணி

59



இளம் துறவி ரமணரைப் பற்றி தெரிவித்த அய்யங்காருடைய எண்ணத்தை ஏற்று, பூசாரி குருமூர்த்தம் சென்றார்! ரமணரைப் பார்த்தார்; பணிந்தார்; பணிவிடை செய்யும் பொறுப்பை ஏற்றார்! இரண்டையும் செய்து கொண்டு வந்த அந்தப் பூசாரி பழனிசாமி, பிறகு விநாயகர் சேவையைத் துறந்து முழுக்க முழுக்க ரமணருக்கே தொண்டரானார்!

ரமணரைக் காண பக்த கோடிகள் கூட்டம் அதிகமாகி வந்ததால், அவரை விட்டுப் பிரிந்து வேறு எங்கும் போக முடியாத நிலை ஏற்பட்டு விட்டது. பூசாரிக்கும் ரமணருக்கும் பழநிசாமியைப் போன்ற ஒரு நம்பிக்கையான சாமியாரின் பணியும் தேவையானது. அதனாலே ரமணர் தான் சாகும் வரை பழனிசாமியைத் தன்னருகேயே வைத்துக் கொண்டார். அந்தப் பூசாரியும் ரமணர் சாகும்வரை அவர் உடனேயே இருந்து நம்பிக்கையாளரானார் என்பது குறிப்பிடத்தக்க சம்பவமாகும்.

முதன் முதலாக மயங்கிக் கீழே விழுந்த ரமணரைத் தாங்கிப் பிடித்தவருள் ஒருவர் இந்தப் பழனிசாமி பூசாரிதான் அன்று முதல் அவரை எச்சரிக்கையுடன் கவனித்து வந்தவரும் இதே பழனிசாமிதான். ஒரு வேளை பழனிசாமிப் பூசாரி வெளியே செல்லும் அவசியம் நேரிட்டால், அப்போது ரமணரை ஓர் அறைக்குள்ளே போட்டுப் பூட்டிவிட்டுப் போவார்.

இரமணர் அடிக்கடி மயக்கமடைவார் என்பதற்கு ஒரு சுவையான எடுத்துக் காட்டை இங்கே தருகிறோம்:

குன்றக்குடி மடம் எனப்படும் குருமூர்த்தத்திற்கு முன்பு இரண்டு புளியமரங்கள், நன்றாகக் காய்த்து, பழுத்துக் கொத்துக் கொத்தாய் புளியம்பழங்கள் தொங்கிக் கொண்டிருந்தன. இதைத் திருடர்கள் பார்த்தார்கள். இன்று புளியம் பழத்தை அடித்து மரத்தை விட்டு இறக்கிக் கொண்டுபோய்விட வேண்டும் என்று அந்த இரண்டு திருடர்களும் கூட்டணியோடு இறங்கினார்கள்.

ஆனால், குரு மூர்த்தம் திண்ணையில் ரமணர் ஆடாமல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரமண_மகரிஷி.pdf/61&oldid=1280782" இலிருந்து மீள்விக்கப்பட்டது