பக்கம்:ரமண மகரிஷி.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

60

ரமண மகரிஷி


அசையாமல் அமர்ந்திருந்ததைக் கண்ட திருடரணி, இந்தச் சாமியார் நமக்கு எமனாக இருப்பானே, விழித்துக் கொண்டிருக்கும் இவனை மீறி எப்படி புளியம்பழத்தை அடித்துக் கொண்டு போவது என்று அஞ்சினார்கள்.

இந்த அணியில் ஒரு அதி புத்திசாலி திருடன், ஒரு குறுக்கு யோசனை செய்தான். ஆடாமல் அசையாமலிருக்கும் இந்த குட்டிசாமியார் விழித்திருக்கிறானா? தூங்குகிறானா? என்பதைச் சோதித்து விடலாம் என்று எண்ணினான். மெதுவாக குட்டித் துறவியிடம் வந்து பச்சிலைச் சாற்றைப் பிழிவோம். விழித்திருந்தால் லபோதியோ என்று கத்துவான். அப்போது நாம் ஓடிப்போவோம் என்ற தனது யோசனையை மற்றவனிடம் கூறினான்!

ஒரு திருடன் வெங்கட்ராமன் உட்கார்ந்திருக்கும் இடமருகே வத்து அவரது முகத்தைப் பார்த்து, பச்சிலைச் சாற்றைப் பால சந்நியாசி கண்களிலே பிழிந்தான். அந்த அணியினர் எதிர்பார்த்தபடி பிராமண சந்நியாசி சத்தம் ஏதும் போடவில்லை. திருடர்களுக்கு ஒரே கொண்டாட்டம் எகிறிக் குதித்துக் கொண்டு ஓடி தங்கள் திட்டத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு ஓடிவிட்டார்கள்.

திருடர்கள் தங்களது காரியத்தைச் சுலபமாக முடித்துக் கொண்டதற்கு என்ன காரணம் தெரியுமா? அப்போது சின்னசாமி மயக்கம் வந்து ஆடாமல் அசையாமல் திண்ணைச் சுவற்றிலே சாய்ந்து கிடந்தார். பாவம்!

இரமணர் பெருமை, தெய்வத் தொண்டு அருளாண்மையோடு அவர் வழங்கும் ஆசியால் அவர் மகிமை சிறுகச் சிறுக ஊர் தாண்டி நகர் தாண்டி, வட்டம் தாண்டி, மாவட்டம் தாண்டி, மாநிலம் முழுவதும் பரவிக் கொண்டே இருந்தது.

அப்போது யார் இந்தப் பாலயோகி? இவ்வளவு சக்தியை மக்களிடம் பெற்று வருகிறானே! எந்த ஊர்க்காரன்? அவன் வரலாறு என்ன? என்பதை யாரும் அறிய முடியாமலிருந்தனர்! ரமணரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரமண_மகரிஷி.pdf/62&oldid=1280783" இலிருந்து மீள்விக்கப்பட்டது