பக்கம்:ரமண மகரிஷி.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என். வி. கலைமணி

65



சடங்குக்காக வந்திருந்த எல்லாரும் பரபரப்புடன் திடுக்கிட்டு எழுந்து ‘எங்கே? எங்கே?’ என்று கேட்டு வியப்படைந்து நின்றார்கள்.

உடனே ஓடிவந்த அந்த ஆள், திருவண்ணாமலை நகரில்! சாமியாராக! இருக்கிறானாம் என்றான்.

அந்த ஆளுக்கும் வெங்கட்டு மீது கொள்ளையாசை! அதனால் செய்தியைக் கேட்டறிந்த உணர்ச்சியுடன் அவசரம் அவசரமாக ஓடிவந்து கத்தினான். தனக்கு எப்படிக் கிடைத்தது இந்தத் தகவல் என்பதையும் அந்த மனிதன் கூறிய போதுதான், அழகம்மையின் கொழுந்தனார் நெல்லையப்பருக்கும் முழு நம்பிக்கை வந்தது!

நெல்லையப்பர் அதே ஆளைக் கூட்டிக் கொண்டு, தகவல் கிடைத்த இடத்துக்குச் சென்று அங்கே மேலும் சில விவரங்களைத் தெரிந்து கொண்டு, அன்றிரவே திருவண்ணாமலை சென்றார்.

இரமணரிஷி அப்போது வெங்கட்ராம நாயக்கரின் மாந்தோப்பு மேடையிலே அமர்ந்திருந்தார். நெல்லையப்பர் ‘ரமணரைப் பார்க்கவேண்டுமென்று நாயக்கரிடம் அனுமதி கேட்டார்’. நாயக்கர் ‘முடியாது’ என்றார். மறுபடியும் நெல்லையப்பர் கெஞ்சினார். நாயக்கர் மீண்டும் மறுத்தார். இறுதியாக நெல்லையப்பர் தான் யாரென்பதையும், தனது பெயரையும் ஒரு தாளில் எழுதி இதை ரமணரிடம் கொடுங்கள் என்று கெஞ்சிக் கேட்கவே அவர் மனமிரங்கித் தனது கட்டுப்பாட்டைத் தளர்த்தினார். கடிதத்தை அவர் ரமணரிடம் காட்டினார். அதைக் கண்டதும் அவர்களை உள்ளே அனுப்புமாறு சைகை செய்தார் ரமணரிஷி!

நெல்லைப்பரைக் கண்டதும், ரமண சுவாமிகள் வாய்திறந்தே அவரிடம் பேசவில்லை. காரணம், அப்போதிருந்த சூழ்நிலையானது அவரை வாயைத் திறக்க விடவுமில்லை; அதற்கான நேரமுமில்லை; சந்தர்ப்பமும் அமையவில்லை. இந்தச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரமண_மகரிஷி.pdf/67&oldid=1281046" இலிருந்து மீள்விக்கப்பட்டது