பக்கம்:ரமண மகரிஷி.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என். வி. கலைமணி

71


பாலயோகி அவர் என்று கேள்விப்பட்டு திருவண்ணாமலை வந்தார்.

விரூபாட்சிக் குகையிலே தியானத்தில் இருந்த வெங்கட்ராம சுவாமியைக் கணபதி முனீந்திரர் சென்று சந்தித்தார். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டே சிறிது நேரம் இருந்தபோது, புலமையால் உருவாகி இருந்த அவரது ‘நான்’ என்ற ஆணவம் தணல்பட்ட வெண்ணெய் போல் உருகி நீரானது போன்ற ஒரு நினைப்பு அவரிடையே காணப்பட்டது. அதைக் கணபதி முனீந்திரர் மிக எளிதாக உணர்ந்து கொண்டார். அதனால் ஏதோ ஒரு சக்தியை முனீந்திரர் இழந்தது போன்ற உணர்வடைந்தார்.

வெங்கட்ராமன் திருவண்ணாமலையிலே உள்ள அருணாசலத்தின் மலையை 1896ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் முதன் முதலில் மிதித்தாரோ, அன்று முதல் 1907ஆம் ஆண்டுவரை, அவர் யாரிடமும் எதுவும் பேசாமல் அனைவரிடமும் மௌனமாகவே காட்சி தந்து கொண்டிருந்தார். அந்த மௌன விரதம் கணபதி முனீந்தரரின் சந்திப்பால் கலைந்து விட்டது.

மௌனத்திலிருந்த பாலயோகிதான் பெற்றிருந்த சத்திய தரிசனத்தைச் சுவாமி, கணபதிக்கு முதன் முதவில் உபதேசமாக அருள் பாலித்தார். கணபதி அன்று யோகி இடத்திலேயே தங்கிவிட்டார். பழனிசாமி சாமியிடம், வெங்கட்ராம சாமியின் முழு விவரங்களையும் கேட்டறிந்தார். இந்தக் கணபதி முனீந்திரர்தான், வெங்கட்ராம சாமியின் முழு விவரங்களையும் கேட்டறிந்தார். இந்தக் கணபதி மூனீந்திரர்தான், வெங்கட்ராம சுவாமியின் திருப்பெயரை ‘ரமண மகரிஷி’ என்று மாற்றியமைத்தார். இந்தப் பெயர் தான் உலகமெங்கும் பரவியது. உலகம் அவரை ரமண மகரிஷி என்றே அழைத்து பெருமைப்பட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரமண_மகரிஷி.pdf/73&oldid=1281217" இலிருந்து மீள்விக்கப்பட்டது