பக்கம்:ரமண மகரிஷி.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12. அன்னையுடன் ரமணர்

ருக்கே மகன் மன்னனானாலும் மாதாவுக்கு அவன் மகன்தானே! எனவே, மகன் ரமணர் ஊராருக்கு மகானாக இருக்கலாம்; ஆனால், எனக்கு அவன் பிள்ளைதானே! அந்த பிள்ளை நல்ல உணவு இல்லாமல், நல்ல உடை உடுக்காமல், (கோவணாண்டியாய் கண்ணுக்கெட்டாத தூரத்தில் இருக்கிறானே! தினந்தோறும் அவன் திருமுகத்தைப் பார்க்க முடியவில்லையே என்ற கவலைதான் ரமணர் தாய்க்கு.

தாய் அழகம்மாள் அதனால்தான் கடந்த முறை மூத்த மகன் நாகசாமியோடு திருவண்ணாமலைக்கு வந்தார். இந்த முறை அந்தப் பாக்கியம் கூட அந்த அன்னைக்குக் கிட்டவில்லை. ஏன் தெரியுமா?

சென்றமுறை தனக்குத் துணையாக வந்த அந்த அம்மையின் மூத்த மகன், அதாவது ரமண ரிஷியின் அண்ணன், இந்த முறை தாயுடன் வரவில்லை காரணம் நாகசாமி இளமைப் பருவத்திலேயே இறந்து விட்டார், அதனால் அழகம்மை தனியாகவே தனது மகனான ரமணரிஷியைக் காண வந்தார்! மூத்த மகனை இழந்த சோகத்தோடு இளைய மகனைக் காண வந்தார் அந்தத் தாய்!

வெங்கட்ராமன் வீட்டை விட்டு வந்து விட்டபோது, தேடாத இடமெலாம் தேடி இறுதியாக திருவண்ணாமலையின் அருணாசலத்திலே சாமியாராக இருப்பதைக் கேள்விப்பட்டதும் திருவண்ணாமலைக்கு ஓடோடி வந்தாரே நெல்லையப்பர் என்பவர் அதாவது அழகம்மையாரின் கொழுந்தனார்; அவரும் காலமாகி விட்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரமண_மகரிஷி.pdf/76&oldid=1281233" இலிருந்து மீள்விக்கப்பட்டது