பக்கம்:ரமண மகரிஷி.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என். வி. கலைமணி

75


இத்தகைய இழப்புகளால் வேதனையுடன் தீர்த்த யாத்திரை செல்லும் வழியில் திருவேங்கடத்தான் சந்நிதியான திருப்பதி ஏழுமலையானின் திருக்கோவிலுக்குச் சென்று தரிசித்து விட்டு, அப்படியே திருவண்ணாமலைக்கு வந்து மகனான மகான் ரமண மகரிஷியைப் பார்த்து விட்டுப் போகலாமே என்ற எண்ணத்தில் அழகம்மையார் அருணாசலம் விரூபாட்சி குகைக்கு வந்தாள்.

மகனைப் பார்த்தாள்! மகானைப் பார்க்க மக்கள் வரிசை வரிசையாக நிற்பதையும் தாயார் அழகம்மை பார்த்து மனம் பூரித்துப் போனார்! நமது பிள்ளையைக் காணவா இவ்வளவு பெரிய கூட்டம்! அடேயப்பா! என்று அவரை ஈன்ற போது பெற்ற இன்பத்தைவிடபெரும் மகிழ்ச்சியை அங்கே அனுபவித்தாள் அந்த தாய்!

தீர்த்த யாத்திரையின் போது பல ஊர் தண்ணீர் அழகம்மை உடம்புக்கு ஒத்து வாராமையாலோ என்னவோ அந்த அம்மையார் திடீரென நோய் வாய்ப்பட்டாள்! பெற்ற தாய்க்கு அருமை மகன் ரமண மகரிஷி உடனிருந்து எல்லாப் பணிவிடைகளும் செய்தார். காய்ச்சல் கடுமையானது; அதன் அடையாளமாக ஜன்னியும் கண்டது. அப்போது ரமணமகரிஷி அருணாசலேசுவரர் மீது அம்மையே அப்பா, அன்னையின் நோயை குணப்படுத்து ஈஸ்வரா என்று பாடல் பாடித் துதித்து, தியானத்தில் ஆழ்ந்து போனார்! நீண்ட நேரமாக மகான் கண்களைத் திறக்காமல். கண் மூடியபடியே தேவாரம் ஓதினார்! பிறகு, கண் விழித்த மகரிஷி, காய்ச்சல் வேகம் தணிந்ததைக் கண்டு விபூதியை அன்னையின் நெற்றியிலே பூசினார்! நோயும் குணமானது!

உடல் சுகமானதும், தாய் வீட்டுக்குப் போக எல்லா ஏற்பாடுகளையும் செய்து வழியனுப்பி வைத்தார். வீடு போய் சேர்ந்த அன்னை மகனுக்குத் தகவல் அனுப்பினார். அதன் பின்னாலே, ரமணருடைய தம்பி நாகசுந்தரத்தின் மனைவி குழந்தையைப் பெற்ற பின்பு மரணமடைந்து விட்ட செய்தியும் வந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரமண_மகரிஷி.pdf/77&oldid=1281234" இலிருந்து மீள்விக்கப்பட்டது