பக்கம்:ரமண மகரிஷி.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

76

ரமண மகரிஷி



இந்த துக்கத்தைத் தாங்க முடியாத அழகம்மை, ஓராண்டு சென்றபின், அதாவது 1916ஆம் ஆண்டு அமைதியைத் தேடி மீண்டும் அருணாசலம் வந்து மகரிஷியிடமே தங்கிவிட்டார். இளம் வயது மனைவியை இழந்த நாகசுந்தரத்தால், குழந்தையைக் காப்பாற்ற முடியவில்லை.

இந்த நேரத்தில் மீண்டும் அழகம்மையார் நோயாளியானார்! தான் உயிர் பிழைப்பது அரிது என்று எண்ணிய அந்தத் தாய், நாகசுந்தரத்துக்கு எழுதிய கடிதத்தில் “எனது இரண்டு மகன்களையும் ஒரே இடத்தில் பார்த்து விட்டுச் சாக ஆசை” என்று எழுதியிருந்தார். அக்கடிதத்தைப் படித்த நாகசுந்தரம் அருணாசலத்துக்கு வந்து தனது தாயாரையும், மகான் ரமண ரிஷியையும் கண்டு தரிசித்தார். பிறகு தம்பியும் துறவறம் பூண்டு அண்ணனுக்குத் தொண்டரானார்.

அன்னை அருணாசலத்தில்! ரமணரும் அருணாசலத்தில்; அழகம்மையின் கடைசி மகன் நாகசுந்தரமும் அருணாசலத்தில்! மூவரும் ஒரே இடத்தில் தங்கி ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து மனநிறைவான வாழ்க்கை பெற்றார்கள்.

இந்த நேரத்தில் 1922ஆம் ஆண்டில் மே மாதத்தின் போது அழகம்மை மீண்டும் நோய்வாய்ப்பட்டார். நாளாக வியாதி முற்றியது அவளுக்கு இறுதிக்காலம் நெருங்கி விட்டதை ரமண மகரிஷி உணர்ந்து கொண்டார். தாயார் அருகிருந்து கடைசிவரை மகன் என்ற ததுை கடமைகளை, தாய் மனம் நிறைவு பெறும் அளவில் செய்தார்.

ஒரு நாள் தாயருகே வந்த ரமண மகரிஷி, தனது வலக்கையைத் தாய் நெஞ்சிலும், இடக்கையைத் தலையிலும் வைத்து ஆத்ம போதமளித்தார். மனக்கஷ்டங்கள் எல்லாவற்றையும் நீங்கி, அழகம்மை அமைதியானாள்! காலத்தோடு கலந்து விட்டாள்!

பசுவான் ரமண மகரிஷி பெற்ற மாதாவுக்கு ஒரு சமாதி கட்டினார். அதன் மேல் ஒரு சிவலிங்கத்தை நாட்டினார்! அந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரமண_மகரிஷி.pdf/78&oldid=1281236" இலிருந்து மீள்விக்கப்பட்டது