பக்கம்:ரமண மகரிஷி.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என். வி. கலைமணி

83



“அதன் மூலமாக, நீங்கள் மதுரையிலே இருந்து புறப்பட்ட நாள் முதல் இன்றுவரை உங்களுடைய ஆன்ம நோக்கில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டுள்ளதா என்று நான் அறிய விரும்புகிறேன்.”

“எதுவும் இல்லை. எவ்வித மாறுதலும் இல்லாமல் இதே அனுபவம் தொடர்ந்து உள்ளது.”

“அப்படியானால், அருணாசல சுவாமியைப் புகழ்ந்து பாடல்களை மகரிஷி எழுதக் காரணம் என்ன? அவருக்காகவா? அல்லது மக்களுக்காகவா?”

“நான் ஏன் எழுதினேன் என்று எனக்கே தெரியாது. உங்களுக்காக என்றும் கூட ஒரு வேளை இருக்கலாம்.”

“வாழ்க்கை என்றால் என்ன?”

“சாதாரணமாகக் கூறுவதானால், வாழ்க்கை , என்பது உடல், ஆன்ம நோக்கில் கடைசியாகத் தன்னைத்தானே அறிந்து கொள்ளுதல், எவ்விதம் நீ, ஒன்றை நோக்குகிறாயோ, அதைப் பொறுத்தது அது.”

“மரணம் என்பது என்ன?”

“ஒருவனுடைய கடைசியான உண்மைத் தன்மை.”

“தற்கொலை செய்து கொள்வது தவறான காரியமா?”

“ஒரு பாவமும் அறியாத உ.டலைக் கொல்வது மிகப் பெரிய தவறு. தொல்லைகளுக்கு இருப்பிடமான மனதைத்தான் தற்கொலை செய்ய வேண்டும். எதையும் உணராத உடலை அல்ல. மனம்தான் உண்மையான குற்றவாளி. கவலைகளுக்கு இருப்பிடமாக இருப்பதனால் தற்கொலை செய்து கொள்ளத் தூண்டுகிறது. ஆனால், தவறான கருத்து காரணமாகப் பாவமறியாத உடல்தான் தண்டிக்கப்படுகிறது.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரமண_மகரிஷி.pdf/85&oldid=1281279" இலிருந்து மீள்விக்கப்பட்டது