பக்கம்:ரமண மகரிஷி.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

84

ரமண மகரிஷி



மறுபிறப்பு பற்றி மகரிஷி கருத்து

தன்னுடைய கணவரை இழந்த ஒரு பெண்மணி மகரிஷியிடம் மறுபிறப்புப் பற்றிக் கேட்ட கேள்வி இது.

“மறுபிறப்பு இருக்கிறதா?”

“பிறப்பு என்றால் என்னவென்று உனக்குத் தெரியுமா?”

“தெரியுமே. நான் இப்போது உயிரோடு இருக்கிறேன் என்று எனக்குத் தெரியும். ஆனால், வருங்காலத்தில் இருப்பேனா என்பதைப் பற்றித் தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.”

“இறந்த காலம்....! நிகழ்காலம்... எதிர்காலம்.”

ஆமாம், நேற்றைய முடிவுதான் இன்று. இன்று என்பது நாளை எதிர்காலம் என்பது இன்றைய முடிவாகும். நான் சொல்வது சரிதானா?

“இறந்த காலம் என்றோ, எதிர்காலம் என்றோ எதுவும் கிடையாது. நிகழ்காலம் மட்டுமே இருக்கிறது. நேற்று என்பது நீ அனுபவிக்கும் போது அது நிகழ்காலமாக இருந்தது. அதுபோன்றே நாளையும் நீ அதை அனுபவிக்கும்போது நிகழ்காலமாய் இருக்கும். நிகழ் காலத்தின்போதுதான், நீ அனுபவிக்கிறாய், அனுபவத்திற்கு அப்பால் எதுவும் இல்லை.”

“அப்படியானால், கடந்த காலம், எதிர்காலம் என்பவை எல்லாம் வெறும் கற்பனையா?”

“ஆமாம். நிகழ்காலம் என்பது வெறும் கற்பனைதான். நோத்தைப் பற்றிய நினைவு எல்லாம் மனத்தளவில் இருப்பதால், நிகழ்காலமும் கற்பனையே. அதுபோலவே, வான்வெளியும் கற்பனைதான். ஆகையால், நேரத்தாலும், வானவெளியாலும் நிகழும் பிறப்பும், மறுபிறப்பும் கற்பனையைத் தவிர வேறில்லை.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரமண_மகரிஷி.pdf/86&oldid=1281286" இலிருந்து மீள்விக்கப்பட்டது