பக்கம்:ரமண மகரிஷி.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

88

ரமண மகரிஷி


கவலைப்படாமல், தனது பயன்பாடுகளை உணராமல் வழக்கம் போலவே மக்களுக்குப் பயன்பட்டு வருகிறது.”

“மனித மனம்தான் கவலைகளை உண்டாக்குகின்றது. பின்னர் அதே மனம் தான் பிறர் உதவிகளுக்காக அழவும் செய்கின்றது. ஒருவனுக்கு மன மகிழ்ச்சியையும், மன அமைதியையும் கொடுத்து விட்டு, மற்றவர்களுக்குக் கவலைகளை மட்டுமே கொடுத்திட கடவுள் என்ன ஓரவஞ்சகரா? படைப்பில் எல்லாவற்றுக்குமே இடம் இருக்கிறது. ஆனால், மனிதன் நல்லவற்றைப் பார்க்க, நல்லவற்றை எடுத்துக் கொள்ள, அதன்படி நடந்து கொள்ள மறுக்கிறான்.”

“மனிதன் அழகையும், ஆரோக்கியத்தையும் பார்ப்பதில்லை. சுவை மிக்க உணவுப் பொருள்களை எதிரே வைத்துக் கொண்டு, அவற்றை வேண்டுமளவு எடுத்து உண்ணாமலே பார்த்துக் கவலைப்படும் பசித்த மனிதனைப் போல நடந்து கொள்கிறான்; வாழ்கிறான். இது யாருடைய குற்றம்? கடவுளுடையதா? மனிதனுடையதா?”

“அதிருஷ்ட வசமாக எல்லையில்லாக் கருணையுடன் கடவுள் மனிதர்களை மன்னித்து விடுகிறார். மனிதர்களுக்காக நீதி நெறிகளை, ஞான நூல்களை, சான்றோர்களை, வேதங்களை அளித்து அவர்களைத் திருத்தி, நல்வழிப்படுத்திடப் பார்க்கிறார்.”

“இந்த உலகத்தில் உள்ள இன்பங்கள் எல்லாம் எதற்கும் உதவாதவை. துன்பங்களை, வேதனைகளைக் கொடுப்பவை என்றும் தெரியும். தெரிந்தும் கூட நாம் இன்பங்களையே தேடிச் செல்லுகிறோம். இதற்கு எப்படி ஒரு முடிவு காண்பது?”

"கடவுளைப் பற்றி சிந்தனை செய்; நினைத்துக் கொண்டே இரு; எல்லாப் பற்றுக்களும் உன்னை விட்டு விலகி ஓடும். ஆசைகள் எல்லாம் ஒழிந்து பின்பு கடவுளைத் தொழுவோம். பிரார்த்திப்போம் என்று நினைத்தால், நீ பலகாலம் பொறுத்திருக்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரமண_மகரிஷி.pdf/90&oldid=1281332" இலிருந்து மீள்விக்கப்பட்டது