பக்கம்:ரமண மகரிஷி.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என். வி. கலைமணி

91




“முதலில் மனிதன் தன்னுடைய ஆசைகளைப் பூர்த்தி செய்ய வேண்டி கடவுளிடம் வேண்டுகிறான். தன்னுடைய ஆசைகளை விட்டு, கடவுளை அடைய வேண்டுமென்று பிரார்த்தனை செய்யும் காலமும் வரும். மனிதனுடைய தேவைக்கும், பிரார்த்தனைக்கும் ஏற்றவாறு கடவுள் மனித உருவிலோ, அல்லது மற்ற உருவிலோ தோன்றி அவனுக்கு வழிகாட்டித் தன்னுள் அழைத்துக் கொள்கிறான்.” என்றார் மகரிஷி!

இந்த நேரத்தில் ரமணாஸ்ரமத்திற்கு அமெரிக்க யாத்ரிகர்கள் சிலர் வந்திருப்பதாக, மகரிஷியின் அணுக்கத் தொண்டரான பழனிசாமி என்ற சாமியார் ஓடிவந்து மகரிஷியிடம் கூறினார்!

வந்த அமெரிக்க யாத்ரிகர்கள் ரமண மகரிஷியைச் சந்தித்து ஆசி பெற்றார்கள். நாளை மீண்டும் சந்திப்போம். ஆசிரமத்தில் தங்கி இளைப்பாறுங்கள் என்று மகான் கூறவே, பழனிசாமி சாமியார் எல்லா வசதிகளையும் அவர்களுக்குச் செய்து கொடுத்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரமண_மகரிஷி.pdf/93&oldid=1281341" இலிருந்து மீள்விக்கப்பட்டது