பக்கம்:ரமண மகரிஷி.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

15. அமெரிக்க ஐரோப்பியருடன்
மகரிஷி

கரிஷி ரமணர் ஆசிரமத்தில் அமெரிக்கர்கள், ஐரோப்பியர்கள், கிறித்துவத்தைப் பரப்பிட வந்த பாதிரியார்கள் போன்ற அறிவுடையார் எல்லாம் சில நாட்களாக தங்கியிருந்தார்கள். அவர்கள் ஏன் அங்கே தங்கியுள்ளார்கள் என்ற விவரம் யாருக்கும் தெரியவில்லை.

மகரிஷி எல்லா அயல் நாட்டாரிடமும் பாசத்தோடும் நேசத்தோடும் பழகி, அவர்களுக்குரிய விருந்துபசாரங்களை எல்லாம் செய்து கொடுத்தார். ரமணர் அவர்களுடன் கலந்துரையாடிக் கொண்டிருந்தபோது, அவர்களுள் ஒருவர் எழுந்து, “கடவுள் உருவத்தில் எப்படி இருப்பார்? மனிதனைப்போல இருப்பாரா?” என்று கேட்டார்.

இரமணர். ‘ஆமாம்’ என்றார்! உடனே அந்த அமெரிக்கர் மீண்டும் மகரிஷியை நோக்கி, “அப்படியா! கண், காது, மூக்கு ஆகிய உறுப்புக்களுடனா?” என்றார்.

‘ஆமாம்’, உனக்கு அந்த உறுப்புக்கள் இருந்தால், கடவுளுக்கு ஏன் இருக்கக் கூடாது? என்று ரிஷி அவரை மறு கேள்வி கேட்டார்.

“இந்து மத நூல்களில் கடவுளுக்கு இந்த அவயங்கள் எல்லாம் உண்டு என்று நான் படித்த போது, எனக்குச் சிரிப்பு வந்து விட்டது.” என்று அந்த அமெரிக்கர் கிண்டலடித்தார் ரமண மகரிஷியிடம்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரமண_மகரிஷி.pdf/94&oldid=1281343" இலிருந்து மீள்விக்கப்பட்டது