பக்கம்:ரமண மகரிஷி.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என். வி. கலைமணி

93



உடனே மகரிஷி அவரை நோக்கி, “உனக்குக் கண், காது, மூக்கு ஆகியவை இருப்பது பற்றி நீயே ஏன் சிரித்துக் கொள்ளவில்லை? என்றார்.

அமெரிக்காவிலே இருந்து வந்தவர்கள் பலவித எண்ணங்களை உடையவர்களாக இருந்தார்கள். ஒருவர் கடவுள் எந்த உருவில் இருப்பார் என்ற சந்தேகம் தீர வந்தவர்; மற்றவர் சித்தர் என்றால் யார்? அவரைப் பார்க்க வேண்டும் என்று வந்தவர், அடுத்தவர் இப்படிப்பட்ட சந்தேகங்களைப் புரிந்து கொண்டு, அதை அமெரிக்க நண்பர்களிடம் சொல்லி தற்பெருமை பெற வேண்டும் என்ற நோக்குடையவர்; இன்னொருவர், இவ்வாறு - திரட்டிய கருத்துக்களைப் புத்தகமாக வெளியிட வேண்டும் என்ற சிந்தையுடன் வந்தவர்.

இப்படிப்பட்டவர்களுள் ஒருவரான சித்தர்களைப் பார்க்க வந்தவர், சித்தர்கள் எல்லாம் மலைமேலேதான் வாழ்பவர்கள் என்று நினைத்துக் கொண்டு, அமெரிக்கா செல்வதற்கு முன்பு அருணாசலம் மலை முழுவதும் சுற்றி அலைந்தார். சித்தர் ஒருவரைப் பார்க்காமல் அமெரிக்கா திரும்பக் கூடாது என்ற வைராக்கியத்தோடு இரவு நேரத்தின் இருட்டிலும் சுற்றிக் கொன்டே அலைந்தார்.

ஆசிரமத்துக்கு அயல்நாடுகளிலே இருந்து வருபவரை தக்க முகவரியுடனும், தகுதி நிலையோடும் தங்க வைப்பது ஆசிரம அன்பர்கள் பொறுப்பு. அதற்கேற்ப, சித்தர்களை பார்க்க வந்தவரைக் காணவில்லை என்ற சந்தேகம் ஆசிரமத்தில் அலை மோதியது. ஆளுக்கொரு திசையாக அந்த அமெரிக்கரை ஆசிரமவாசிகளும் பொதுமக்களும் தேடிக் கொண்டிருந்தார்கள்.

ரமணர் பழனிசாமியிடம் ஒரு பெரும் விளக்கைக் கொடுத்து ஆளுக்கொரு மூலையாக விளக்கை ஏந்திக் கொண்டே தேடுங்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரமண_மகரிஷி.pdf/95&oldid=1281345" இலிருந்து மீள்விக்கப்பட்டது