பக்கம்:ரமண மகரிஷி.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

94

ரமண மகரிஷி


என்றார். அதற்கேற்ப கடைசியில் பெரும் பாடுபட்டு அலைந்து அந்த அமெரிக்கரை தேடித் அழைத்து வந்து விட்டார்கள்.

சித்தர்களைத் தேடியலைந்தவர், தனது தேடலையும் அதன் தொடர்பாக அவர் கண்ட காட்சிகளையும் கூறியபடியே, மகரிஷியை நோக்கி, “மகரிஷி அவர்களே! ஆத்ம ஞானத்தை எனக்குக் கொடுங்கள்; நான் உங்களுக்கு மிகவும் கடமைப் பட்டவனாக இருப்பேன்” என்று பணிவோடு வேண்டினார்.

மகரிஷி அதற்கு ஏதும் பதில் பேசாமல் ம்...ம்.... என்றார்.

மறுபடியும் அவர் “ஆத்ம ஞானத்தை எனக்குக் கொடுங்கள். நாளை நான் இந்த ஊரை விட்டே போய் விடுகிறேன்; எப்போதும் நான் ரிஷியைப் பற்றியே நினைத்துக் கொண்டிருப்பேன்” என்றார்.

அதற்கு மகரிஷி, ஒரு போதும் நீ இந்த இடத்தை விட்டுப் போக மாட்டாய் என்றார்.

அதற்கு அந்த அமெரிக்கர் அச்சப்பட்டார். எங்கே தனது சித்துக்களைப் பயன்படுத்தி, நம்மைப் போகவிடாமல் ரிஷி செய்து விடுவாரோ என்ற பயத்தில் எனக்கு எனது ஊரில் மிக முக்கியமான வேலை உள்ளது. நான் போகும் பாஸ்போர்ட்டும் தயாராக உள்ளது. திரும்பிப் போவதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட்ட என்னை, மகரிஷி எப்படித் தடுத்து நிறுத்தப் போகிறார்? என்று மகரிஷியையே அவர் கேட்டார்.

மகரிஷி நீ ஒரு போதும் போக மாட்டாய். ஏன் தெரியுமா? நீ இங்கே வரவில்லை. கப்பல், ரயில், கார். இவைதானே உம்மை இங்கே கொண்டு வந்து சேர்த்தன: இங்கு வந்து நீ சேருகின்ற வரையிலும் ஒன்றும் செய்யவில்லையே, சும்மாதானே நீ உட்கார்ந்திருந்தாய்? என்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரமண_மகரிஷி.pdf/96&oldid=1281348" இலிருந்து மீள்விக்கப்பட்டது