பக்கம்:ராகுல் சாங்கிருத்யாயன்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

off ராகுல் சாங்கிருத்யாயன்

அவரது வாழ்வின் இந்தக் கட்டத்தில் மார்க்சிஸம் அவரை வெகுவாக ஈர்த்தது. 1935-ல் முதன் முறையாக சோவியத் ரஷ்யாவுக்குப் போய்வந்த பிறகு அவர் தீவிர சோஷலிச ஆதர வாளர் ஆகிவிட்டார். கிசான் சபை மற்றும் இந்திய தேசிய காங்கிரசில் சேர்ந்து தீவிர அரசியல்வாதியானர். அவர் மேலும் மூன்று தடவைகள், 1937, 1944, 1962-ம் வருடங்களில், சோவியத் ரஷ்யா சென்ருர். துரதிர்ஷ்டவசமாக, அவர் தனது ஞாபக சக்தியை இழந்துவிட்ட பிறகு, கடைசித் தடவையாக சோவியத் ரஷ்யாவுக்கு வைத்திய சிகிச்சைக்காகப் போஞர். குணம்பெருமலே திரும்பி வந்தார். அவர் மாங்கீகில் 1989 அக்டோபர் 19-ல் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் ஆளுர்; ஒன்பது வருடங்கள் கம்யூனிஸ்டாக இருந்தார். 1948 ஜனவரியில் பம்பாயில் இந்தி சாகித்ய சம்மேளனத்தில் அவர் நிகழ்த்திய தலைமை உரை காரண மாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அவருடைய உறுப்பினர் பதவியை ரத்து செய்தது. அவர் சதா அறிவின் ஒரு பீடத்திலிருந்து மற்குெரு இடத்துக்கு, ஒரு வகையான நம்பிக்கைகளிலிருந்து இன்னுெரு வகைக்கு என்று சஞ்சாரம் செய்து வந்தார். மனித குலத்தை துன்ப துயரங்களிலிருந்து மீட்கும் வழியைத் தேடித் திரியும் அமைதியற்ற ஆத்மாவாகவே அவர் இருந்தார்.

அவருக்கு பத்து வயது கூட ஆகியிராத சமயம், 1903-ல் அவர் சொந்த ஊரை விட்டு இரகசியமாக வெளியேறி பஞரஸ் (காசி) போனு 1907லும் 1909லும் வேலை தேடியும், சுயபலத்தில் வளரவேண்டும் என்றும் அவர் கல்கத்தா போளுர். 1910-ல் அவர் தனது முறையான யாத்திரைகளைத் தொடங்கினர். இமயமலையை இலட்சியமாகக்கொண்டு, முதலில் சந்நியாசிகளின் கோஷ்டி யோடு போளுர், பிறகு தனியாகச் சென்ருர். பிறகு, அடுத்த பதினுேரு வருடங்கள் அவர் இந்தியா முழுவதும் சுற்றினர். காசி, பராஸ் , திருமிஷி, திருப்பதி, காஞ்சீபுரம், பெங்களுர், விஜய நகரம், திரியம்பகம், உஜ்ஜயினி, அகமதாபாத், அயோத்தி, ஆக்ரா, லாகூர், குடகு என்று பலப்பல ஊர்களுக்கும் நகரங்களுக் கும் போனர். 1926-ல் அவர் மீண்டும் இமயமலைக்கு, திபெத்துக்கு, புஷாஹர் மாநிலம், ஸ்ம்நாம், காநாம், ஸ்பிதி மற்றும் தொலை தூர இடங்களுக்குச் சென்ருர்,

ராகுலின் அயல் நாட்டுப் பயணங்கள் 1923-ல் தொடங்கின. அவரது முதல் பயணம் நேப்பாளத்துக்கு. 1927-ல் பூரீலங்கா போளுர். 1980-ல் அவர் தனது பெயரை ராம் உதார் தாஸ் என்பதிலிருந்து முறையான பெளத்தப் பெயர் ஒன்றுக்கு - ராகுல் சாங்கிருத்யாயன் என்று மாற்றிக்கொண்டார். அது கடைசி வரை நிலைத்துவிட்டது. அவர் திபெத்துக்கு நான்கு முறைகள்