பக்கம்:ராகுல் சாங்கிருத்யாயன்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிமுகம் IÍ

போளுர். இப் பயணங்கள் மிகக் கடுமையானவை, பயங்கர மானவை; ஆயினும் ரொம்பவும் மனசுக்குப் பிடித்தவை, பயனுள்ளவை என்று அவர் தனது பயண நூல்களில் குறிப்பிட் டிருக்கிரு.ர். 1932-ல் அவர் ஐரோப்பா சென்ருர்; அங்கே பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து மக்களின் வாழ்க்கையைக் கண்டறிந்தார். சோவியத் ரஷ்யாவில், லெனின் கிராட் பல்கலைக் கழகத்தில் அவர் கற்றுக்கொடுத்தார். ரஷ்யாவைச் சேர்ந்த மத்திய ஆசிய சோவியத்துகளைப் பற்றிய ஒரு விசேஷ் ஆய்வை அவர் மேற்கொண்டார். பின்னர் அவர் மத்திய ஆசிய வரலாறு பற்றிய பெரிய நூலே இயற்றினர். மத்ய ஆசியா கா இதிஹாஸ் என்ற அந்த நூல் இரண்டு பாகங்கள் கொண்டது. அது 1958-ல் இந்தி மொழிக்கான சாகித்திய அகாடமிப் பரிசைப் பெற் றது. ராகுல், மத்திய மற்றும் தூரகிழக்குப் பகுதிகளில் உள்ள பல்வேறு நாடுகளுக்கும் பயணம் செய்தார். ஜப்பான், கொரியா, ஈரான், சீனு ஆகியவற்றுக்குப் போனர். 1907 முதல் 1963-ல் அவரது மரணம் வரை, அவருடைய வாழ்க்கை இடைவிடாத பயணங்களின் கதையேயாகும். அதிலிருந்து அவர் ஒரு தத்துவம் அமைத்து, ஊர்சுற்றிகளுக்கான சாஸ்திரம்-கூமாக்கார் சாஸ்த்ரா என்ற நூலே எழுதினர். அமைதியான இல்லற வாழ்க்கை என்று அவர் ஒன்றிரு வருடங்கள் கூடக் கழித்திருக்கமாட்டார். முதலில், அவர் லெனின் கிராடில் மங்கோலிய அறிவாளியான வோலா (எல்லன் ஸ்மெர்தோல்ணு சாங்கிருத்யாயன்) என்பவரை மணந்தார். இகார் என்ற மகன் பிறந்தான். ஸ்டாலின் ஆட்சி காலத்தில் தாயோ, மகனுே இந்தியாவுக்கு வந்து ராகுலுடன் வசிப் பதற்கு அனுமதிக்கப்படவில்லை. பின்னர், அவர் இந்திய நேபாளப் பெண்மணி ஒருவரை மணம் புரிந்தார். கமலா பெரி யார் என்ற டாக்டர் கமலா சாங்கிருத்யாயனும் அவரும் மசூரியில் சில வருடங்கள் தாம்பத்திய வாழ்க்கை நடத்தினர், ஜெயா என் ருெரு மகளும் ஜேடா என்ருெரு மகனும் பிறந்தபின், பூரீலங்கா வித்யாலங்கார பல்கலைக் கழகம், பெளத்த சமயப் பேராசிரியர் ஆகப் பணிபுரிவதற்கு அவரை அழைத்தது. அங்கே அவர் கடுமை யாக நோய்வாய்ப்பட்டார். நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், இதய நோய் தாக்கி, மிகை உழைப்பு உழைத்திருந்த உடலின் ஆரோக்கியத்தை வெகுவாக பாதித்தன. ஏற்கெனவே குறிப் பிட்டபடி, அவர் தனது ஞாபகசக்தியை இழந்தார். கடைசி இரண்டு வருட காலமும் நினைவற்ற நிலையிலேயே இருந்தார். 1963-ல் டார்ஜிலிங்கில் உயிர் துறந்தார். அவர் தகனம் செய்யப் பட்ட இடத்தில் ஒரு சிறு நினைவுச் சின்னம் இருக்கிறது.

ஆரம்பப் பள்ளியில் அவர் உருது கற்றுக்கொண்டிருந்த காலத்தில், நவஜிந்தா பஜிந்தா எழுதிய குத்ராய் கா நதிஜா என்ற