பக்கம்:ராகுல் சாங்கிருத்யாயன்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்க்கை

ராகுல், கேதார்நாத் பாண்டேயாக 1893 ஏப்ரல் 9-ம் நாளில் பிறந்தார். அவர் தந்தை கோவர்தன் பாண்டே மதப் பற்று கொண்ட ஒரு விவசாயி, குறைவான வசதிகளே பெற்றிருந்தார். அவருடைய தாயார் குலவந்தி தன் பெற்றோர்களுடன் பாண்டகா கிராமத்தில் வசிப்பது வழக்கம். அங்குதான் கேதார் பிறந்தார். அவருடைய தாய் இருபத்தெட்டாவது வயதிலும், தந்தை நாற்பத்தைந்தாவது வயதிலும் இறந்துவிட்டனர். எனவே, ராகுல் அவருடைய பாசம் மிகுந்த பாட்டியால் வளர்க்கப் பட்டார். அவருடைய ஆரம்பகால நினைவுகள், அவர் குறித்து வைத்திருக்கிறபடி 1897-ம் வருடத்திய கொடிய பஞ்சமே ஆகும்.

1898 நவம்பரில் அவர் மதார்ஸா என்று அழைக்கப்பட்ட ஒரு ஆரம்பப் பள்ளிக்கு அனுப்பப்பட்டார். அங்கு தான் உருது எழுத்துக்களுடன் அவருக்கு அறிமுகம் ஏற்பட்டது. விளையாட்டு களில் அவர் திறமை காட்டவில்லை என்பதை அவரே ஒப்புக்கொள் கிரு.ர். சையத்வியா முஸ்லிம்கள் அவருடைய பள்ளித் தோழர் களாக இருந்தனர். அவரது ஆரம்பகால ஆசிரியர்களில், ராணிஸாராய் கீழ்நிலை ஆரம்பப் பள்ளியின் பாபு பத்தார் சிங் என்பவரை நினைவுகூர்கிருர், அந்த ஆசிரியர் மாணவர்களை ஈவு இரக்கம் இல்லாமல் அடிப்பது வழக்கம். ராகுல் தன் சுயசரிதை யின் முதல் பாகத்தில் அனுபந்தம் எண் 2-ல், தனது குல முறை மையையும் கோத்திரத்தையும் பற்றி, வேத காலம் முதல் விசித் திரசித்தம் பெற்றிருந்த தாத்தா ராம்சரண் பதக் காலம்வரை விரிவாக ஐம்பது பக்கங்கள் எழுதியிருக்கிரு.ர். தன் தந்தையைப் பற்றியும் அவர் நகைச் சுவையுடன் எழுதியிருக்கிருர். ஊர் சுற்றும் மகனை அவர் துரத்திய விவரத்தை சுவையாக வர்ணித் திருக்கிருர் ராகுலின் தாயும், அவருடைய ஒரே சகோதரியும், அவரது பச்சிளம்பருவத்தில் இறந்து போயினர். ராகுலுக்கு மிகச் சிறு வயதில் கல்யாணம் நடைபெற்றது. ஆளுல் அவர் தனது முதல் மனைவியைப் பார்த்ததே இல்லை. அவர் ஒன்பது வயதுச் சிறுவனக இருந்தபோதே, பஞரஸ் போவதற்காக, வீட்டைவிட்டு வெளியேறினர். பதிலைாவது வயதில் கல்கத்தா செல்ல