பக்கம்:ராகுல் சாங்கிருத்யாயன்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்க்கை 宽器

மகாத்மா காந்தி கொலை செய்யப்பட்ட பிறகு, தனது வைஞ்ஞானிக் பெளதிக்வாத் (விஞ்ஞானபூர்வ உலகாயதவாதம்) என்ற நூலில் காந்தியை முதலாளித்துவ ஏஜன்டு என்று குறிப் பிட்டுக் கடுமையாக விமர்சித்துள்ள அதே ராகுல், அந்த நாளுக்கு பிறகு இனி சிகரெட்டைத் தொடுவதில்லை என விரதம் பூண்டார். அதைக் காப்பாற்றினர். அவர் மாமிச உணவை விரும்பினர். ஆனல் மது வகைகளை உட்கொள்ளவில்லை, மட்டற்ற மன உறுதி பெற்ற மனிதர் அவர்.

இளம் பிராயமான பதினேழாவது வயதில் முதல் முறையாக இமயமலைக்குப் போன சுருக்கமான யாத்திரை அவருள் ஆழ்ந்த மனப்பதிவை ஏற்படுத்தியிருந்தது. இமயமலைக்கும் அப்பால், தடை செய்யப்பட்டிருந்த பிரதேசங்களுக்குப் போகவேண்டும் என்ற ஆத்ம தாகம் அவருக்கு உண்டாகியது. அவர் காசிக்குத் திரும்பினர். அங்கே சக்ரபாணி பிரம்மச்சாரியின் ஆசிரமத்தில் வசித்தார். 1910 அக்டோபரில், சம்ஸ்கிருத லகு.கெளமுதியை அவர் முறைப்படி கற்கத் தொடங்கினர். ஒரு தடவை சுளுர், மிர்லாபுர், அலகாபாத் ஆகிய இடங்களுக்கு நடந்தே போளுர், ஆளுல், காசியில் அவர் அநேக சம்ஸ்கிருத நூல்கள், காவியங்கள், இலக்கணம், மருத்துவம், வான சாஸ்திரம் எல்லாம் படித்தார். சிரம சாத்தியமான சித்திகளையும் நாம ஜபங்களையும் செய்து சில தேவ தேவியரின் அருளைப் பெறுவதற்கும் அவர் முயன்ருர்.

பகுத்தறிவு ரீதியான முதல் தேடல் அவருக்கு அவரது பத்தொன்பதாவது வயதில் தோன்றியது. பண்டிதர் ராமாவதார் சர்மாவின் பேச்சைக் கேட்டபோது அது ஏற்பட்டது. சர்மா பெரும் கல்விமான்; எனினும் அவர் வேதங்களே நம்பவில்லை; கடவுள் நம்பிக்கையும் அவருக்கில்லை. ராகுல் தயானந்தர் பள்ளி யில் ஏழாம் வகுப்பில் சேர்க்கப்பட்டார். அங்கு ஆங்கிலமும் கணிதமும் கற்ருர். ஆனல் முறையான கல்விப் பயிற்சி என்பது அவருக்கு விதிக்கப்பட்டிருக்கவில்லை. ராகுல் பராசா மடத்தில் முறையான சாதுவானுர். அவர் பெயர் ராம் உதார் தாஸ் என மாற்றப்பட்டது. அந்த மடத்தின் வருங்கால வாரிசாகவும் தலைவராகவும் இருந்து அனுபவிக்கக்கூடிய வசதியான வாழ்வு அவருக்குப் பிடிக்கவில்லை. கோயில் தெய்வங்களை இயந்திர ரீதி வில் பூசை செய்கிற சடங்கு சம்பிரதாயங்களே அனுஷ்டிக்கும் ஒழுங்குமுறைப்படியான காலவரையறைகளை அவர் வெறுத்தார். சரஸ்வதி என்ற இந்தி மாசிகையையும், டான்' என்ற ஆங்கிலப் பத்திரிகையையும் படிக்கலானர். சம்ஸ்கிருதம், இந்தி மொழிப் புத்தகங்கள் சிலவற்றை வாங்கினர்.