பக்கம்:ராகுல் சாங்கிருத்யாயன்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

器翻 ராகுல் சாங்கிருத்யாயன்

பயண ஆர்வம் மறுபடியும் ராகுல தொந்தரவு படுத்தியது. 1920-ல்,27-ம் வயதில் ராகுல் கார்வியிலிருந்து ரயில் மூலம் டிக்கட் இன்றிப் பிரயாணம் செய்தார். பனரஸில் நோய்வாய்ப்பட்டார். முதல் தடவையாக சாரநாத் போஞர். கோரக்பூரிலிருந்து, புத்தர் பரிநிர்வாணம் அடைந்த இடமான காசியா சேர்ந்தார். இப் புத்த ஸ்தலங்களுக்குப் போனது பற்றி அவர் தனது சுயசரிதை யில் பரவசமான கவிதை நடையில் எழுதியிருக்கிரு.ர். கோரக்பூரி விருந்து அவர் நேபாளம் சென்ருர் . லும்பினிக்கும் கபிலவாஸ்து வுக்கும் போளுர், நிகாலிஹாரா ஏரிக்கரைமீது சிதைந்த நிலையில் காணப்பட்ட அசோகர் கல்வெட்டு அவரைக் கவர்ந்தது. அவர் போதியாக்களின் பிரதேசத்துக்குச் செல்லவேண்டும் என்று ஆசைப்பட்டார். நேபாள மகந்து (உயர் புரோகிதர்) ஒருவர் அவரைத் தம் சீடராக ஏற்றுக்கொள்ள முன்வந்தார். ராகுல் அதை மறுத்துவிட்டார். இந்தப் புரோகிதர்களுக்கும் கஞ்சா பிடித்து ஒழுக்கமற்றுத் தி ரி யு ம் யோகினிகளுக்கும் உள்ள தொடர்புகள் பற்றி அவர் நையாண்டி செய்து எழுதியுள்ளார்.

ராகுலின் வாழ்க்கை யாத்திரையின் சுவாரஸ்யமான, அபாய கரமும் துணிச்சலும் நிறைந்த பகுதியை, திபெத்துக்கு அவர் நான்கு தடவைகள் போனது, பற்றி சொல்வதற்கு முன், ராகுலின் அரசியல் வாழ்வை சுருக்கமாகக் கூறலாம். அதை அவர் "அரசியலில் பிரவேசம் (1921-27) என்று குறிப்பிடுகிருர். அவ ருடைய முதலாவது அரசியல் பேச்சு, 1921-ல் காண்ட்வா என்ற இடத்தில் ஒத்துழையாமை இயக்கத்தின்போது அவர் பேசியது ஆகும் என்று அவர் நினைவுகூர்கிரு.ர். அவர் சந்நியாசியாக, காவி உடையோடு, சாலம்பூர் ஜில்லா காங்கிரஸ் கமிட்டி அலுவலகத் தினுள் சென்று, பராசாவிலிருந்து தனது பணியைத் தொடங்க விரும்புவதாகத் தெரிவித்தார். ஒரு சம்பவத்தை அவர் நகைச் சுவையோடு பதிவு செய்திருக்கிருர். மூடபக்தி கொண்ட சீடர்கள், தெய்வீக மாந்தர் என்று பேர் பண்ணி வாழ்ந்தவர்களுக்கு, பலி யிடப்பட்ட மிருகங்கள். கஞ்சா, மதுபானம் ஆகியவற்ை ற வழங்கு வதை விட மறுத்தனர். அப்போது ஒருநாள் ராகுல், தன்மீது காந்தி என்ருெரு புதிய சாமி வந்திருப்பதாக நடித்தார். இப் போது எல்லாக் கடவுள்களும் காந்தி பாபா கூடத்தான் இருக் கிருர்கள். கஞ்சா, மதுபானம், பலியிடும் மிருகங்கள் முதலிய வற்றை யார் கொடுத்தாலும் சரி, அவர்கள் அழிந்துபோவார் கள். நான் அவர்களை சபிக்கிறேன்' என்று கூச்சலிட்டார். அது நல்ல பலன் அளித்தது. சந்நியாசி ராகுல், சாப்ராவில் வெள்ளத் தால் பாதிக்கப்பட்ட ஏழை எளியவர்களுக்கு உதவிபுரிவதில் ஈடு பட்டார். அந்நாட்களில் சமூக சேவையும் தேசீய இயக்கமும் தனித் தனியான செயல் துறைகளாக இருந்ததில்லை. ஏக்மாவில்.