பக்கம்:ராகுல் சாங்கிருத்யாயன்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 ராகுல் சாங்கிருத்யாயன்

வின் பழைய பிரதிகளைப் படித்தார். இலங்கையில், பாவி நூல் கழக வெளியீடுகளும், ராயல் ஏஷியாடிக் சொசைட்டி அதன் லண்டன், பம்பாய், வங்காளம், இலங்கை கிளைகளிலிருந்து பிரசுரம் செய்த சஞ்சிகைகளின் பழைய தொகுதிகளும் தான் அவரது ஆர்வத்தைப் பெரிதும் ஈர்த்தன. ஆரம்பத்தில் அவர் தனது பிராமணதர்மக் கடவுள் நம்பிக்கையோடு புத்தமதக் கொள் கையை இணக்கமுறச் செய்ய முயன்ருர். ஆனல் அத்தகைய சக வாழ்வு நெடுங்காலம் நீடித்திருக்க முடியவில்லை. சர் டி.வி. ஜெயதிலகே அவருக்குத் தேவைப்பட்ட புத்தகங்கள் அனைத்தையும் வாங்கி உதவிஞர். 1927 டிசம்பரில், இந்திய தேசீய காங்கிரஸ் மாநாடு சென்னையில் நடைபெற்ற பின்னர், ராஜேந்திர பிரசாத் இலங்கை சென்ருர், அங்கே ராகுல் அவருக்கு வழிகாட்டியாக உதவிபுரிந்தார். ராகுல் எழுத்தாளர் வாழ்க்கையைத் துவக்கியது இந்தக் கட்டத்தில்தான். அலாகாபாத்திலிருந்து வெளிவந்த சரஸ்வதி என்ற இந்தி மாதப் பத்திரிகையில் இலங்கைபற்றிய கட்டுரைகளை அவர் எழுதினர். ஸ்தல மாணவர்கள் சிலருக்கு சம்ஸ்கிருதம் கற்றுத் தந்தார். சிங்களமும் பிரஞ்சும் படித்தார். திபெத்துக்குப் போகவேண்டும் என்ற வலிய எண்ணத்தோடு அவர் இந்தியா திரும்பிஞர். - -

ராகுல், 1929, 1934, 1936, 1988ஆம் வருடங்களில், நான்கு முறை திபெத் சென்ருர் பக்தியார் கில்ஜி தனது படைகளோடு நளாந்தா, விக்ரமoலா பல்கலைக் கழகங்களைத் தாக்கியபோது புத்த பிக்குகள் கையெழுத்துப் பிரதிகளையும் ஒலேச்சுவடிகளையும் எடுத்துக்கொண்டு நேப்பாளம், அஸ்ஸாம், திபெத் ஆகிய இடங் களுக்குத் தப்பி ஒடிஞர்கள். அநேக நூல் நிலையங்களும் மடங் களும் அழிக்கப்பட்டு தீயிடப் பெற்றபோது, இந்திய சிலாருபங்கள் சிற்பங்களிலும் கதை ஒவியங்களிலும் பாதுகாக்கப்பட்டவிதத்தில், பன ஒலேச் சித்திரங்களாகவும், புனித நூல்களின் மர அட்டை களில் தீட்டிய படங்களாகவும் திபெத்துக்கு எடுத்துச் செல்லப் பட்டன. இந்தக் கலே புதிய முறையில் பட்டுப் பதாகைகளில் பதிவு செய்யப்பட்டுமிருந்தன. பெளத்தக் கலை இதில் புதியதோர் போக்கை அடைந்திருந்தது. இந்தியக் கோட்டுச் சித்திரங்களும் சீன இயற்கைக் காட்சிகளும் வஜ்ரயானி தேவாலயப் படங்க ளோடும் ஸ்தல மக்கள் கலையோடும் கலந்துபோயின. ஒலைச் சுவடிகள் இந்தியாவிலிருந்து திபெத்துக்கு ஏழாம் நூற்ருண்டில் சென்றன. இதுபற்றிய குறிப்பு திபெத்திய சக்கிரவர்த்தி ஷ்ராங் வத்சன்-லாம்-போ (கி.பி. 630-693)வின் ராஜசபையில் காணப் படுகிறது. இந்த நடவடிக்கை ஒன்பதாம் நூற்ருண்டு முதல் பதின்மூன்ரும் நூற்ருண்டு வரை நிகழ்ந்தது. அப்போது ஆயிரக் கணக்கான சம்ஸ்கிருத மற்றும் பாலி நூல்கள் போத் மொழியில்