பக்கம்:ராகுல் சாங்கிருத்யாயன்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்க்கை 船が

பெயர்த்தெழுதப்பட்டன. இப்புத்தகங்களின் ஞானம் புத்தமதம், அதன் தத்துவங்களின்மீது புதிய ஒளி பாய்ச்சுவதுடன் பிராமணிய மற்றும் ஜைன மரபுகளையும் தெளிவுபடுத்துகிறது. ஏனெனில் இங்கே மறைந்துபோன அநேக நூல்கள் திபெத்திய லாமாக்களின் மடங்களில் பாதுகாக்கப்பட்டு வந்தன. கஞ்சூர், தஞ்சூர் மடங் களில் மட்டும் இத்தகைய 10,000 இந்திய நூல்கள் பத்திரப் படுத்தப்பட்டிருந்தன. ராகுல் நான்கு தடவைகள் திபெத்போப் வந்ததன்மூலம் இந்த மதிப்பு மிகுந்த விஷயங்களை அதிக அளவில் இந்தியாவுக்குத் திரும்பக் கொண்டுவர முடிந்தது. திபெத் மொழி யின் ஆரம்பப் பாடநூல் மற்றும் இலக்கணத்தை சம்ஸ்கிருதத்தில் எழுதுவது, தர்மகிர்த்தி, சுபந்து, அசங்கா போன்ற பெளத்த தர்க்க ஞானிகளின் நூல்களைப் புதுப்பிப்பது, பாதுகாப்பது ஆகிய பணிகளில் ராகுல் முன்ளுேடி வேலைகள் செய்தார். பின்னர், பெளத்த தர்க்கம் என்ற நூலின் கீர்த்தி வாய்ந்த ரஷ்ய ஆசிரியரான பேராசிரியர் ஷெர்பாட்ஸ்கி, லெனின்கிராட் பல்கலைக் கழக நினைவுகள் என்ற அவரது புத்தகத்தில், இப் பொருள்பற்றி மெய்ம்மையாகக் கற்றுக்கொடுக்கக் கூடியவர் தனக்குப் பிறகு இந்த உலகத்தில் ஒரே ஒரு நபர்தான் உண்டு என்றும், அவர் ராகுல் சாங்கிருத்யாயன் தான் என்றும் எழுதினர். ராகுல் பெளத்த இயல் பண்டிதர் என்ற முறையில் சோவியத் ரஷ்யாவுக்கு அழைக்கப்பட்டார். லெனின்கிராட் பல்கலைக் கழகத்தில் அவர் கற்பித்தார். பிறகு தனது வாழ்வின் அந்திம காலத்தில் ரீலங்கா வித்யாலங்காரா பல்கலைக் கழகத்தில் போதித்தார். ஆளுல் இந்தியப் பல்கலைக் கழகம் எதிலும் அவர் தன் வாழ்நாளில் ஒரு முறைகூட அனுமதிக்கப்பட்டதில்லை: கற்றுத்தர அழைக்கப்பட்டது மில்லை. முறையான பட்டப் படிப்பை அவர் பெற்றிருக்கவில்லே என்பதுதான் காரணமாகும்! தோல் தடித்த நமது கல்லூரி நிர்வாக அதிகாரிகளின் பரிதாபத்துக்குரிய தன்மைதான் என்னே! 1928-ல் திபெத்துக்குப் போவது சுலபமான காரியம் அல்ல. நேப்பாளம் வழியாக ரகசியமாய் போகவேண்டும். அவர், சிவராத்திரி யாத்திரையைப் பயன்படுத்திக்கொண்டு, ரக்சால், அம்லேக்கஞ்ச் வழியே நேப்பாளம் போளுர், திறந்த லாரி ஒன்றில் அவர் காத்மண்டு சென்ருர். காத்மண்டுவில் மகா பெளத்த ஸ்தூபியில் துக்பா-லாமாவை சந்தித்தார். லடாக்கின் ஹெமிஸ் லாமாவிடமிருந்து நல்ல சிபாரிசுக் கடிதம் ஒன்றை ராகுல் பெற்றி ருந்தார். இங்கே அவர் ஒரு நேப்பாளியாக மாறினர். துக்-பா லாமாவின் சீடர் குழுவில் சேரமுயன்ருர். ஆனால், அவர் லாமாவை சந்திக்க நிர்ணயித்திருந்த இடமான எல்மானுக்கு லாமா போகவே யில்லை; நேரே நேமாம் போய்விட்டார். ராகுல் தேசசஞ்சாரிக ளான திபெத்திய வியாபாரிகளின் கோஷ்டியில் சேர்த்துகொண்

3