பக்கம்:ராகுல் சாங்கிருத்யாயன்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்க்கை .爵擎

லம்போ கம்பா போளுர். சீனாவுக்கு ஒடிப்போன டாஷி லாமாவை சந்தித்தார். தலாய்லாமாவுக்கு அடுத்தப்படியாக மிகச் சக்தி வாய்ந்த மதத் தலைவர் அவர். ஷிகார்ச்சேயிலிருந்து, ராகுல் மட்டக் குதிரைமீது, டிக்கி-தோமோ, ஜரலா கணவாய், நகாச்சே, தண்டே-காம்-வாலா வழியாக லாஷா போய் சேர்த் தார். கு-ஓரி எனும் இடத்தில் ஒரு படகின்மூலம் பிரம்மபுத்திரா நதியைக் கடந்தார். 1929 ஜூலை 19-ம் நாள், சிறிது தொலைவி லிருந்து, போடாலா மடத்தின் தங்கக் கூரையை அவர் கண்டார். மூன்று மணி நேரம் நடந்தபின் அவர் தர்ம சாகுவின் அரண் மனையை அடைந்தார். அங்கே அவருக்கு நல்ல வரவேற்பு கிட்டியது. ராகுல் தர்ம சாகுவை நேப்பாளத்தில் சந்தித்திருந் தார். அவருடைய இரு புதல்வர்களான பூர்ணமன், கியான்மன் சாகுவுக்குக் கடிதங்கள் வாங்கி வந்திருந்தார். - - -

கடைசியாக ராகுல், திபெத்தின் தலைநகரமான லாஷா போய் சேர்ந்தார். ஆளுல் அவர் எந்த நாட்டின் வழியே வந்தார் என்பது பிரிட்டிஷ் அரசுக்குத் தெரியாது. திபெத். அந்நியர்களை விரும்பியதில்லை. எனவே தன்னை ஒரு புத்த சமய சீடராக தலாய் லாமாவிடம் அர்ப்பணித்துக்கொள்ள ராகுல் விரும்பினர். சம்ஸ் கிருதத்தில் 151 செய்யுள்கள் இயற்றினர். அவற்றை போத் மொழியில் பெயர்த்து, அழகிய கையெழுத்தில் எழுதி, தலாய் லாமாவின் நம்பிக்கைக்குரியவரான என்கிரி-சாங்மூலம் அதை அனுப்பினர். லாமா மகிழ்வடைந்தார்; ராகுலே ஒரு நாள் கூப்பிட்டு அனுப்புவதாக உறுதி கூறினர். ஆல்ை அதை அடியோடு மறந்து விட்டார். ராகுல் டெபுங் கம்பா போனர். அங்கு ஏழாயிரம் பிக்குகள் பல்வேறு காம்ஜான்களில், அதாவது வெவ்வேறு நாடு களேச் சேர்ந்தவர்கள் தங்குவதற்கென்று ஏற்பட்ட இடங்களில், வசித்தார்கள். ஆளுல் இந்தியர்களுக்கென்று தனி இடம் அங்கே இல்லை. அவர் 16,000 போத் வார்த்தைகளே, சிறுசிறு சீட்டுகளில், சேகரம் செய்து, அவற்றின் மொழி பெயர்ப்பை நேப்பாளியிலும் சம்ஸ்கிருதத்திலும் குறித்தார். அவர் ஆரம்பத்தில் மூன்று. வருடங்கள் அங்கே தங்கியிருந்து, திபெத் மொழியில் ஆட்டுமே கிடைக்கிற புத்த சமய நூல்களைக் கண்ட்ெடுத்து ஆராயவேண்டும் என்ற ஆசையோடுதான் வந்தார். ஆல்ை, பொருளாதார நெருக் கடிகள் குறுக்கிட்டன. காசி வித்யாபீடத்தைச் சேர்ந்த ஆச்சர்ய நரேந்திர தேவா மாதந்தோறும் ஐம்பது ரூபாய் உதவித் தொகைக்கு ஏற்பாடு செய்தார். பாதாந்த் ஆனந்த கெளசல் யாயன், அபூர்வமான நூல்களையும் தாங்கா ஒவியங்களையும் வாங்கு வதற்கென்று, இலங்கையிலிருந்து மூவாயிரம் ரூபாய் அனுப்பி வைத்தார். ராகுல், மிகப் புராதனமான மகாவிகாராவைப் பார்ப்பதற்காக சாம்யே போனர். நளாத்தாவைச் சேர்ந்த பிக்கு