பக்கம்:ராகுல் சாங்கிருத்யாயன்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

燃莎 ராகுல் சாங்கிருத்யாயன்

அங்கியம் கோயிலக் (Fire-Temple) கண்டார். ராகுல் తిత్తాత్ర ஜ்வாலாமாய் என்று குறிப்பிடுகிருர், அங்கு நாகரி எழுத்தில் இருந்த ஒரு கல்வெட்டைப் படித்தார். இந்த இடத்திலிருந்து கப்பலின்மூலம் ஈரானுக்குப் பயணமாளுர், டெஹ்ரான், விராஸ், மஷித் சென்ருர் ரயிலில், பலுசிஸ்தான் மார்க்கமாய், லாகூர் வந்தார். டாக்டர் பிரபோத சந்திர பக்ஷி கல்கத்தா பல்கலைக் கழகத்திற்காக, ராகுலிடமிருந்து கஞ்சூர்-ஐ விலக்கு வாங்கிக் கொண்டார்.

தனது சுயசரிதையில், முதல் முறையாகத் தனக்கு ஏற்பட்ட கடுமையான நோய் பற்றிக் குறிப்பிட்டிருக்கிரு.ர். அவருக்கு நாற்பத்து இரண்டாவது வயதில் டைபாய்டு கண்டது. பாட்ை ஆஸ்பத்திரியில் ஐந்து நாட்கள் அவர் தன் நினைவு இன்றிக் கிடந் தார். ஆயினும் அவர் 1936-ல் மீண்டும் திபெத்தில் இருந்தார்; 1937-ல் ஈரானிலும், 1937-38-ல் சோவியத் ரஷ்யாவிலும் இருந் தார். இம்முறை சோவியத் கலைக்கழகத்தின் (Academy) அழைப் பின் பேரில் ரஷ்யா சென்றர். மாஸ்கோவிலிருந்து அவர் லெனின் கிராட் போளுர்; அங்கு 1937 நவம்பர் 17 முதல் 1988 ஜனவரி 13 முடிய தங்கிஞர். இங்கே இந்தோ-திபெத்தியப் பிரிவின் செயலாள ராகப் பணியாற்றிய லோலா (எல்லின நார்வர்தோவ்ன கோஸ் ரோவ்ஸ்காயா வைச் சந்தித்தார். திபெத்திய சமஸ்கிருத அகராதி ஒன்றைத் தயாரிப்பதில் அவள் ஈடுபட்டிருந்தாள். அவ ளுக்கு பிரஞ்சு, ஆங்கிலம், ரஷ்யன், மங்கோலிய மொழிகள் பேசத் தெரியும். ராகுல் அவளுக்கு சம்ஸ்கிருதம் கற்றுக் கொடுத்தார். அவள் அவருக்கு ரஷ்ய மொழி கற்பித்தாள். அவர்கள் நட்பு ஆழ்ந்த உறவாக வளர்ந்து, கல்யாணத்தில் முடிந்தது. அவர்கள் ஆரம்பத்தில் சம்ஸ்கிருதத்தில் காதல் கடிதங்கள் எழுதிக்கொண்ட தாக அவள் இந்நூலாசிரியரிடம் தெரிவித்தாள். அவருடைய மகன் இகார் (அவனுக்கு அக்னி - ரஷ்யனில் ஒகான்' - என்று பெயரிட அவர் விரும்பினர்) 1938 செப்டம்பர் 5-ம் நாளில் பிறந் தான். ஆளுல், ராகுல் 1945 ஜூலையில் மீண்டும் சோவியத் ரஷ்யா போனபோதுதான் அவனைப் பார்க்க முடிந்தது. இந்தப் பயணம் 1947 ஆகஸ்ட் 17 உடன் முடிவடைந்தது. அந்த வருடத் திற்குப் பிறகு அவர் தன் மனைவியையும் மகனையும் பார்க்க முடியா மலே போய்விட்டது. லோலா மறு மணம் புரிந்துகொள்ளவே பில்ல்ே. 1982-ல், ராகுல், ஞாபகமறதி நோயினுல் பீடிக்கப்பட் டிருந்தபோது, சோவியத் ரஷ்யாவுக்கு எடுத்துச் செல்லப்பட்டார். அவள் அவரைக் காண வந்தாள். மகா பண்டிதரின் கண்களி லிருந்து நீர் பெருகி ஓடியது. எவ்விதமான தகவல் தொடர்புக்கும் சாத்தியமில்லாது போயிற்து. இந்நூலாசிரியர் 1972 அக்டோ பரில் லெனின்கிராடில் அவளைச் சந்தித்தார். ராகுலும் ஷெர்