பக்கம்:ராகுல் சாங்கிருத்யாயன்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

器雳 ராகுல் சாங்கிருத்யாயன்

பற்றி ஆங்கிலத்தில் எழுதியுள்ள நவீன இந்திய வரலாற்று ஆசிரியர் கள் மூன்று பேரை மட்டுமே அவர் குறிப்பிடுகிரு.ர். எஸ். என். தாஸ்குப்தா, எஸ். ராதாகிருஷ்ணன், எஸ். சி. வித்யாபூஷண் ஆகியோரே அவர்கள். மார்க்ஸ், எங்கெல்ஸ், ஃபியூவர்டாக். ஷெர்பாட்ஸ்கி இவர்களின் ஐந்து புத்தகங்களும் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளன. -

சிறையிலிருந்து விடுதலையானதும் அவர் தனது சொந்த ஊருக் குப் போளுர், முப்பத்துநான்கு வருடங்களுக்குப் பிறகு அவர் அங்கே போனதை மிக உணர்ச்சியோடு விவரித்திருக்கிரு.ர். எவ் வளவோ மாறுதல்கள் ஏற்பட்டிருந்தன; எனினும் மாற்றங்கள் இல்லாமலும் இருந்தன. அவரது குழந்தைப் பருவத்தில் அறிமுக மானவர்கள் எவ்வளவு பிரியத்துடன் அவரை வரவேற்ருர்கள். அவருடைய முதல் மனேவி அவரைப் பார்க்க வந்தாள். ஆனல் அவளோடு திருமண உறவு நிறைவேறுவதற்குள் அவர் அவளை விட்டுப் பிரிந்து போய்விட்டார். அவர் திரும்பவும், 1942 முதல் 1944 முடிய இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்தார். சில சமயம் அரசியல் வேலைகளுக்காகச் சுற்றினர்; இதர சமயங்களில் இலக்கியச் சந்திப்புகளுக்காகப் போனர். தனது நாட் குறிப்புகளே ஆதாரமாகக் கொண்டு அவர் எழுதியிருக்கிற பயண விவரங்களேப் படிக்கிறவர்கள், ஒரு விசித்திரமான மனசை சந்திக்க நேரிடும். ஒரு இடத்தில் பதினெட்டு வகையான நேப்பாளிப் பேய் பிசாசு களின் பட்டியல் தரப்படுகிறது; மற்ருெரு இடத்தில் பதினுேரு வகை திபெத்தியப் பிசாசுகள் விவரிக்கப்படுகின்றன. பேச்சு வழக்குகள், பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள் பற்றி விரிவாக எழுதப்பட்டுள்ளன. அவருடைய எழுத்துக்கள், பூர்வகுடி கலா சார இயல், சமூக இயல், பொருளாதார நிலைமைகள், மொழி இயல், பிரயாணச் சிரமங்கள், பூகோள சாஸ்திர மற்றும் புவி இயல் விஷயங்கள், அரசியல் நெருக்கடிகள், தொல் பொருள் இயல், மத வரலாறு, பிரசித்திபெற்றிராத மத நம்பிக்கைகள் மற்றும் பலவிதமான நம்பிக்கை முறைகள் முதலியன பற்றிய தகவல் களஞ்சியமாகவே விளங்குகின்றன. எல்லாம் ஒரே மூட்டை யில் கலந்து கிடக்கின்றன. இத்தகவல்களை அவர் வெகு சுவை பாகவும் தன்னியல்பாகவும் பேசுகிறநடையில் சொல்லிக்கொண்டு போகிறர். தேவையில்லாத விவரணைகளால் சிரமப்படுகிற அல்லது அலுப்படைகிற உணர்வு வாசகருக்கு ஏற்படுவதேயில்லே.

1948க்குப் பிறகு, ராகுல் பெரும்பாலும் இந்தியாவிலேயே தங்கினர். சினவுக்கு ஒரு பயணமும், பூரீலங்காவில் கற்றுக் கொடுக் கும் வேலை நிமித்தம் ஒரு தடவையும் போய் வந்தார். இப் பயணங்களுக்குப் பிறகு அவர் நோய்வாய்ப்பட்டார். அவருடைய