பக்கம்:ராகுல் சாங்கிருத்யாயன்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்க்கை శ్రీః

கடைசிப் பயணம் சோவியத் ரஷ்யாவுக்கு ஞாபகமறதி நிலையிலேயே நிகழ்ந்தது. இந் நூலாசிரியருக்கும் அவருக்கும் 1944-ல் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. 1948-ல் அவருடன் சேர்ந்து அகராதி தயாரிக்கும் பணியில் உழைத்தார். இந்த எழுத்தாளருடன் ராகுல் 1944-ல் உஜ்ஜயினியிலும், 1950-ல் அலகாபாத்திலும் தங்கியிருந்தார். இவ் ஆசிரியரும் அவர் குடும்பத்தினரும், மூன்று விடுமுறை காலங்களில், நயினிடால், டார்ஜிலிங், காலிம்பாங், குமவான், மசூரி ஆகிய இடங்களில் ராகுலின் விருத்தினராகத் தங்கினர்கள். அவர் இந்த ஆசிரியரின் நெருங்கிய நண்பரானர்.

அவர் கடுமையான நீரிழிவு நோயிஞல் சிரமப்பட்டார். மிகை யான வேலையும், சொந்தக் கவலைகளும் அவரது நோயை அதிகப் படுத்தின; அதனல் அவர் தனது இறுதி ஆண்டுகளில் ஞாபக சக்தியை இழக்க நேர்ந்தது. இத்தகைய பெரும் கல்விமான் தன்னுடைய பெயரைக்கூட வாசிக்கமுடியாமல் போனதும், தொடர்ச்சியாய்ப்பேச இயலாதிருந்ததும் மிகக் கொடிய காட்சியா யிற்று. இவ்விதமான தனிப்பட்ட அதிர்ச்சிகளுக்கும் செயலற்றுப் போகிற நிலைகளுக்கும் உரிய காரணங்களை அறிந்துகொள்ள முடிவதேயில்லை. நிராலா அவரது கடைசி நாட்களிலும், காளி நஸ்ருல் இஸ்லாம் அவருடைய பிந்திய 34 வருடகாலமும் இதே மாதிரி கஷ்டப்பட்டார்கள். மகா பண்டிதரும் படைப்பாளியு. மான ராகுலின் அமைதியற்ற இயல்பு பரிதாபகரமான ஒரு முடிவை அடைந்தது. அவருக்கு உரிய கவனிப்பும், நியாய மாகக் கிட்டவேண்டிய ஒய்வும் கிடைக்கவில்லை என்றே தோன்று கிறது. அவர் காலம் தாழ்த்தே கல்யாணம் செய்துகொண்டார். அவருடைய சிறு குழந்தைகளைப்பற்றிய கவலை அவர் உள்ளத்தை அரித்தது. அரைவாசி ஊமையாக இருந்த கடைசி நாட்களில் அவர் இரண்டு குழந்தைகள் . . . மூன்று குழந்தைகள்' என்று சதா முணுமுணுப்பது வழக்கம். ஒருவேளை அவரது உள்ளத்தின் வேகத்திற்கு அவர் உடல் ஈடுகொடுக்க முடியாமல் இருந்திருக்க லாம்; மருந்துகளின் துணையோடு எப்பொழுதும் முன்னைப்போலவே தீவிரமாக உழைக்கமுடியும் என்ற மயக்கத்தில் அவர் கடுமையாக உழைத்திருக்கக்கூடும். அவரது இந்தக் கடைசிக் கட்டம்பற்றி அவருடைய மலைவி கமலா சாங்கிருத்யாயன் மட்டுமே ஆதார பூர்வமாக எழுதமுடியும். ஆனாலும், என்னதான் சொன்னலும் யூகித்தாலும், உண்மை எப்போதும் விலகியே நிற்கும். மரணம், பரிகாசம் பண்ணும் பைலேட் போல (ஏசுவை விசாரித்த நீதிபதி) ஒரு விடைக்காகக் காத்திருக்கவில்லை.

தனிநபர் என்ற தன்மையில், அவர் தயாள குணத்தோடும், அன்போடும் நடந்துகொண்டார். சுய கட்டுப்பாடும் உயர்ந்த