பக்கம்:ராகுல் சாங்கிருத்யாயன்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 ராகுல் சாங்கிருத்யாயன்

யின் பெயர் கனெய்லா கி கதா என்பதாம். இது கதா அல்லது விவரணை என்ற தவருண தலைப்பைப் பெற்றுவிட்டபோதிலும், இந்தப் புத்தகத்தில், கி.மு. 1390 முதல் கி.பி. 1957 முடிய வாழ்க்கை வளர்ந்துள்ள விதத்தைக் கூறுகிற ஒன்பது கதைகள் இருக்கின்றன. இது வங்க மொழிபெயர்ப்பு ஒன்றில் வால்கா முதல் கங்கை வரை இரண்டாம் பாகம்' என்று பெயரிடப் பட்டுள்ளது.

ராகுலுக்கு நிரந்தரமான புகழைத் தேடித்தந்த மிக முக்கிய மான சிறுகதைத் தொகுதி வால்கா ஸே கங்கா (வால்கா முதல் கங்கை வரை) என்பதுதான். வேதகாலத்திற்கு முந்திய நாட்களி விருத்து இன்றைய இந்தியாவின் 1944-ம் வருடம் வரை சம்பந்தப் பட்ட இருபது கதைகள் இதில் இருக்கின்றன. பதின்ைகு கதைகள் புராதன மற்றும் மத்தியகால இந்தியா பற்றியது; பதின்ைந்தாவது கதையிலிருந்து இந்தியாவில் முஸ்லிம் ஆட்சி, பிரிட்டிஷ் ஆட்சி இவற்றின் பின்னணி ஆரம்பிக்கிறது. வரலாற்றின் குறிப்பிட்ட் ஒரு காலகட்டத்தை எடுத்துக்கொண்டு, குறிப்பிட்ட ஒரு கற்பனைச் சம்பவத்தை புதிதாக அமைத்து, அதிை இயங்கியல் பொருள் முதல் வாதக் கண்ளுேட்டத்துடன் ஆய்வு செய்ய ராகுல் முயன்றிருக் கிரு.ர். சில சமயங்களில், காளிதாசன நில உடைமைக் கவிஞன் என்று கூற முனைகையில் அல்லது போலியான இந்து முஸ்லிம் ஒற்றுமையைக் காட்ட முயல்கையில், ஆசிரியரின் வெறுப்பான் போக்கு அவருடைய பரந்தநோக்கை மீறி மேலெழுந்து விடுகிறது. ஆயினும், திட்ட அமைப்பிலும் செயல்பாட்டிலும், இந்த ஒரு படைப்பு தற்கால இந்தி எழுத்து இந்திய இலக்கியத்துக்கு அளித்

துள்ள பெரும் சாதனய்ாகத் திகழ்கிறது.

வாழ்க்கை வரலாறும் சுயசரிதையும்

அவருடைய சுயசரிதை ஐந்து பாகங்கள்: . பூரணமான வாழ்க்கைவரலாறுகளும், வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகளின் தொகுப்புகளுமாகப் பதினேழு பாகங்கள் - இவை ராகுலின் உரைநடை எழுத்துக்களில் மற்றுமொரு பெரும்பகுதி - ஆகும்.

சுயசரிதை 2814 பக்கங்கள் கொண்டுள்ளது. உண்மையில் இது, தனிநபர்களாலும் குழுவினராலும், இந்தியாவிலும் வெளி நாடுகளிலும் உருவாக்கப்பட்ட அரசியல், சமூக, இலக்கிய, வரலாற்று நிலைமைகள் பற்றிய களஞ்சியமேயாகும். இது ராகுல் பற்றி வெகு குறைவாகவும், மற்றவர்கள்பற்றி அதிகமாகவும் கூறுகிறது” என்று காலம் சென்ற சிவசந்திர சர்மா இதைப்பற்றி எழுதியுள்ளார். - -