பக்கம்:ராகுல் சாங்கிருத்யாயன்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படைப்புகள் శిg

மற்றும் நான்கு தொகுதிகள் இயல்பினல் அதிகமாக சுயசரிதை ரீதியிலேயே உள்ளன. அவை அவருடைய பிள்ளைப் பிராய நினைவுகளைக் கூறுகின்றன. பச்பன் கி ஸ்மிருதியான் இவற்றில் சேரும். அதித் ஸே வர்த்தமான் அவர் சந்தித்துத் தொடர்பு கொள்ள நேர்ந்த முக்கியமான வரலாற்றுப் பிரமுகர்கள், பெரிய சிந்தனையாளர்கள் பற்றிய நினைவுகளையும், கட்டுரைகளையும் கொண்டிருக்கிறது. அவருடைய ஒத்துழையாமை இயக்க கால சகாக்கள் பற்றிய நினைவுகள் மேரே அசகாயயோக் கே சாத்தியில் உள்ளன. அவரோடு நெருங்கிய தொடர்புகொண்டிருந்த ஐம்பத்தைந்து பேர்களுக்கு அவச் செலுத்தும் அஞ்சலி ஜின்கா மேன் கிரிதஞ்ஞணுவில் காணப்படுகிறது.

வரலாற்று ஒழுங்கில், இதர வாழ்க்கை வரலாறுகளின்விவரம்: மகா புத்தர் பற்றிய மகா மாணவ புத்தா, சிங்களத்தின் ஏழு பெரிய மனிதர்கள் பற்றி சிங்கள் கே வீக் புருஷ், மற்றும் சிங்கள கூமாக்கார் ஜெய்வர்தன், சர்தார் பிருத்விசிங், கூமாக்கார் ஸ்வாமி (ஹரிசரணுனந் தர்), வீர் சந்திரசிங் கார்வாலி, கப்தான் லால் (ஜஸ்வந்த் சந்திரா), வாழ்க்கை வரலாற்றுச் சித்திரங்களின் மிக மதிப்பு வாய்ந்த தொகுப்பு நவ இந்தியாவின் புதிய தலைவர்கள் பற்றிய நயே பாரத் கிே ந்யே நேதா இரண்டு பாகங்கள் ஆகும். காஷ்மீர் சிங்கம் ஷேக் அப்துல்லா, தோழர்கள் யூசுப், பரத்வாஜ், எஸ். ஜி. சர்தேசாய், சுவாமி சகஜானந்த், எஸ். ஏ. டாங்கே, கல்பன தத்-ஜோஷி, பங்கிம் முக்கர்ஜி, பி. சுந்தரய்யா, கே. கேரளியன், ஆர். பி. மூர், டாக்டர் ஜி. அதிகாரி, டாக்டர் கே. எம். அஷ்ராப், பி. சி. ஜோஷி, எஸ். எஸ். பாட்லிவாலா, முகம்மத் ஷாகித், சையத் ஜமாலுதின் புகாரி,.புஸ்ல் இலாஹி குர்பான், முபாரக் சாகர், டாக்டர் இஸட் ஏ.அகமத், மகமது ஜப்பார். நிராலா, பந்த், மற்றும் பலரின் வாழ்க்கைக் குறிப்புகள் இதில் இடம் பெற்றுள்ளன: இப் புத்தகத்திற்காக ராகுல் ஒவ்வொருவரையும் பேட்டி கண்டு, அவர்வருடைய குடும்ப வரலாறு, பிள்ளைப் பருவம், வாழ்வுத் தொழில், சமூக-அரசியல் போராட்டங்கள் மற்றும் செயல்கள் பற்றிய விவரங்களை சேகரித்தார். இந்தியாவின் சோஷலிஸ்ட் சிந்தனை இயக்கத்தின் வரலாறு சம்பந்தமாக ஆய்வு செய்கிறவர் களுக்கு இது மதிப்புமிகுந்த ஆதார நூலாகப் பயன்படும். துரதிர்ஷ்டவசமாக, இந்தப் புத்தகம் இப்போது கிடைப்பதில்லை. பல வருடங்களாக இதன் மறுபதிப்பு அச்சிடப்படவேயில்லை.

கார்ல் மார்க்ஸ், லெனின், ஸ்டாலின், மா.சே-துங் ஆகியோர் பற்றி இந்தியில் முதலாவதாக வந்த ஆதாரபூர்வமான வாழ்க்கை வரலாறுகள் என்று ராகுல் எழுதிய தீர்மானமான நான்கு தொகுதிகள் இருக்கின்றன. மா-சே-துங்கின் 357 பக்க வாழ்க்கை