பக்கம்:ராகுல் சாங்கிருத்யாயன்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படைப்புகள் 43

ஜைன ராமாயணம் பற்றிக்கூட ஒரு கட்டுரை எழுதினர். தோகாசெளபாய்யின் அமைப்புமுறைக்கும் உத்திக்கும் இந்த ராமாயணம் வழிவகுத்தது. இந்த அமைப்பையும் உத்தியையும் ரொம்பப் பிற்காலத்தில் துளசிதாசர் கையாண்டார். தோகா கோஷ் நூலுக்கு ராகுல் எழுதிய முன்னுரை வெகு தீர்க்கமானது.

இந்த ரீதியான ஆராய்ச்சி முறையில், ராகுல் தாகினி கவிதையிலிருந்து, குதுப் முஸ்தாரி முதலிய படைப்புகளிலிருந்து, கவிதைகளைத் தேர்ந்தெடுத்து, தேவநாகரியில் வெளியிட்டார். தாக்கினி காவ்யதாராவில் பாண்டித்தியம் நிறைந்த முன்னுரை ஒன்று எழுதப்பட்டிருக்கிறது. மேலே குறிப்பிடப்பட்டுள்ளதற்கு இணை யானதாகும் இது. தென் இந்தியாவில் வசித்த முஸ்லிம் சாதுக் களின் இக்கவிதைப் படைப்புகள், மொழியில் மட்டுமின்றி சிந்தனை உள்ளடக்கத்திலும் எவ்வாறு அநேக இந்தியத் தன்மைகளைப் பெற்றுள்ளன என்பதை ஆய்ந்துகூறும் கட்டுரையாக இம் முன்னுரை அமைந்திருக்கிறது. சூஃபி தத்துவத்தை, தக்காணத் தின் அந்த வட்டாரத்தில் நிலவுகிற மக்கள் கவிதை விஷயங்க ளோடு இணைத்துக்காட்டும் முயற்சியும் இதில் கலந்துள்ளது. ஆதாரபூர்வமான இலக்கிய மறுசிந்தனையைக்கொண்ட, வரலாற்று ரீதியாக மதிப்புவாய்ந்த இப் படைப்பின் ஒரே ஒரு பாகம் மட்டும்தான் பிரசுரம் பெற்றது. இந்தி இலக்கிய வரலாற்றுக்கு ராகுல் அளித்திருக்கும் பங்குகள் இவை.

ராகுல் சோவியத் ரஷ்யாவிலிருந்து திரும்பிவந்த பின்னர், சத்ருதீன் ஐனியின் எழுத்துக்களே இந்தியில் மொழிபெயர்த்த பிறகு, பேச்சு வழக்கு என்று சொல்லப்படுகிற மொழியின் அடிப் படையில், இந்தி பேசப்படுகிற பிரதேசங்களைக் காட்டும் தேசப் படத்தைப் புதிதாக வரையவேண்டும் என்று பரிந்துரைத்தார். உண்மையில் அவை தனித்தனி மொழிவாரி இனங்களாகும் என்று அவர் எடுத்துக்கூறினர். போஜ்புரி, மைதிலி, பிராஜ், அவதி, பந்தல்கண்டி, மால்வி, ராஜஸ்தானி முதலியவை ஆரம்பக் கல்விக்கு உரிய சாதனமாக உபயோகப்படுத்தப்படவேண்டும் என்று அவர் வலியுறுத்தினர். போஜ்புரியில் அவர் எட்டு சிறு நாடகங்கள்கூட எழுதினர். பாகோ நஹி, துனியா கோ பாத் லோ (பயப்படாதே, உலகத்தை மாற்றி அமைl) போன்ற தனது புத்தகத்தில் அவர் திட்டமிட்டே கடினமான சம்ஸ்கிருத பாரசீக வார்த்தைகளை விலக்கினர். ஏனென்ருல், பலனுடையதாக விளங்கவேண்டுமானல், எழுதப்படுகிற இந்தி மொழி பேசப்படுகிற மொழியோடு நெருங்கிய தொடர்பு கொண்டிருக்கவேண்டும் என்று அவர் நம்பினர். செயற்கையான இந்துஸ்தானி மொழி உருவாக்குவதை அவர் அலட்சியப்படுத்தினர். அதில் மாபெரும்