பக்கம்:ராகுல் சாங்கிருத்யாயன்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கிய சாதனைகள் 懿翼

தோழர் மகமது ஜப்பார்

முதல் பார்வையில், மகமதுவின் நன்கமைந்த உடல்கட்டும் தன்மையும் அவரைப் பார்க்கிற எவருக்கும் எடுப்பான ஒரு பட்டாணியன் நினைப்பையே ஏற்படுத்தும். ஆனல் அவரது சுத்த மாக சவரம் செய்யப்பட்ட முகத்தில் தோன்றும் இனிய புன்முறுவல் வேறுவித மனப்பதிவை உண்டாக்கும். நான் அவரை முதன் முறையாக தேவ்லி முகாம் சிறையில் கண்டேன். அவர் மிகக் கொஞ்சமாகவே பேசினர். அவர் பேளு வலிமை வாய்ந்தது: ஆளுல் அதை அவர் பெரும் கட்டுப்பாட்டுடன் உபயோகித் தார். . . தேவ்லி முகாமில், அரிதாகக் கிடைக்கக்கூடியனவும் நூலகங்களில் கிடைக்காதனவுமான அநேக நூல்கள் எனக்குத் தேவைப்பட்டன. மகமது அவற்றைப் படித்திருந்தார். அவை எனக்குக் கிடைக்கும்படி செய்வதற்கு அவர் ஏற்பாடு பண்ணினர். அவர் மிகப் பிரியமாகவும் மனவிசாலம் கொண்டவராகவும் இருந்தார். பொதுவாக ஒரு கம்யூனிஸ்ட் வறண்ட, கடுமையான மனிதராகத்தான் உருவகிக்கப்படுகிரு.ர். ஆனல் மகமது வித்தி யாசமான ரகம்; கருணையும் கவர்ச்சியும் உடையவர். தன்னைப் பற்றிப் பெருமையாக நினைத்துக்கொள்ளாத பெரிய மனிதர். அவர் நெடுங்காலம் பண்டிட் நேருவுக்கு அந்தரங்கக் காரியதரிசி யாக இருந்தார். அவர் தனது இலட்சியங்கள் தவிர வேறு எந்தப் பதவியையும் பெரிதாக மதித்ததில்லை' (ஜின்கா மேன் கிரித் தஞ்ளுளு, பக்கங்கள் 237-238).

கல்வியாளர் பாரனிகோவ்

அலெக்சி பீட்ரோவிச் பாரனிகோவ் இந்தியருக்கு அவ்வள வாக நன்கு அறிமுகமானவர் அல்லர். அவர் அதிகமாக அறியப் பட்டிருக்கவேண்டும். லல்லுலால்ஜீயின் பிரேம்சாகர், துளசிதாசின் இராமசரிதமானஸ் ஆகியவற்றை அவர் மொழிபெயர்த்தார். துளசி இராமாயணம் மொழிபெயர்ப்பில் அவர் தனது புலமையை மட்டு மல்லாது தன் ஆழ்ந்த பக்தியையும் புலப்படுத்தினர். கவிதை வடிவத்தையும் வரிகளையும் மூல அவதியில் உள்ளபடியே ரஷ்ய மொழியில் அமைக்க அவர் முயன்ருர். இந்த நூல் ரஷ்யாவில் பிரசுரிக்கப்பட்ட சமயம், நான் லெனின்கிராடில் இருந்தேன். அவர் அநேக விஷயங்களில், சித்திரங்களைத் தேர்வு செய்வதிலும் கூட, என்னைக் கலந்தாலோசித்தார். அந்நாட்களில் இந்தியாவுக் கும் சோவியத் ரஷ்யாவுக்குமிடையே அரசுத் தூதுவர் தொடர்பு கள் இருந்ததில்லை. இக்காவியத்தின், சித்திரங்களோடு கூடிய இரண்டு பழைய பதிப்புகள்பற்றி அவர் என் மூலமாக அறிந்ததும், அவற்றை அடைய முயன்ருர். காசியில் இருந்த நகரி பிரசாரிணி