பக்கம்:ராகுல் சாங்கிருத்யாயன்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கிய சாதனைகள் 55

காட்டுவாசியாக இயற்கை நிலையில் வசித்த ஆதி மனிதனில் தொடங்கி, விவசாயம் மற்றும் மிருக வளர்ப்பு நிலைகள் மூலம் ம்னிதன் பெற்ற சமூக பொருளாதார வளர்ச்சியை ராகுல் வரைந்து காட்டுகிரு.ர். நிலப்பிரபுத்துவமும் மானிய முறையும் தொடர் கின்றன. தந்தை வழிச் சமுதாயம் நிலை பெற்றதும், அடிமை அமைப்புமுறை அங்கீகாரம் பெற்றது. வைதீகமும் சடங்குகள் ரீதி யான மதமும் படிப்படியான இந்த வளர்ச்சிக்குத் துணைபுரிந்தன. வேதங்கள், பிரமாணங்கள், மகாபாரதம், புராணங்கள், மற்றும் பெளத்த சமய அத்த கதா முதலியவற்றிலிருந்து எடுத்த உதார ணங்களை ஆதாரமாகக்கொண்டு, வரலாற்றைப் பொருள் முதல் வாத அடிப்படையில் விளக்கியிருப்பதுதான் ராகுல் செய்திருக்கும் சுயமான இணைப்பு ஆகும். சுதாஸ் கதை ரிக் வேதத்திலிருந்து எடுக்கப்பட்டிருக்கிறது. 'பந்துல் மால் புத்தமதக் கதையை ஆதாரமாக உடையது. ‘நாகதத்தா சாணக்கியரின் அர்த்த சாஸ்திரம், காசிபிரசாத் ஜெய்ஸ்வாலின் ஹிந்து பாலிட்டியையும், பிரபா அஷ்வ கோஷரின் புத்த சரிதா, செளந்தரானந்தா ஆகிய வற்றையும் அடிப்படையாகக் கொண்டவை. ரைஸ் டேவிட் எழுதிய புத்த சமய இந்தியாவும் அதன் வரலாற்றுத் தன்மைக்கு உறுதியளிக்கிறது. சுபர்ணு-யவ்தேயா காளிதாசன் கவிதைகளை யும், துர்முகி பாணரின் ஹர்ஷ சரிதா மற்றும் காதம்பரியையும், சக்ரபாணி நைஷாத்தையும் ஆதாரமாகக் கொண்டுள்ளன. இருபது கதைகளில் பதினன்கு சம்ஸ்கிருதம், பாலி மொழி நூல் களின் அடிப்படையில் அமைந்தவை.

கடைசி ஆறு கதைகள் மத்தியகால, தற்கால இந்திய வரலாறுபற்றிக் கூறுகின்றன. பாபா நூருதீன் அலாவுதின் கில்ஜியின் ஆட்சியைப் பின்னணியாக உடையது. சுரய்யாவில் அக்பரின் தாராளக் கொள்கைகள் அடிப்படையாகப் பயன்படுத்தப் பட்டிருக்கின்றன. ரேகா பகத்'தில் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் கொடுமைகள் தெளிவாக விவரிக்கப்படுகின்றன. மங்கள் சிங்' (1857), சப்தார் (1922), சுமர் (1942), ராகுலும் அவருக்கு முந்திய தலைமுறையினரும் கண்டும் கேட்டுமிருந்த கடுமையான சமூக, பொருளாதார, அரசியல் யதார்த்தங்களின் அடிப்படை யில் எழுதப்பட்டவையாகும்.

உண்மைகளைத் திரித்துக் கூறுதல், காலவழுக்கள், திணிக்கப் பட்ட வரலாறுகள் முதலியவற்றுக்காகப் பண்டிதர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆளுல் இவைகூட வியாக்யானம் செய்வது, ஒரு சார்பாக எண்ணுவது சம்பந்தப்பட்ட விவகாரம்தான். ஒரு சில உதாரணங்களை இங்கே குறிப்பிடலாம். (1) புருதன் , அங்கீரா கதைகளில் அசுர இனம் வர்ணிக்கப்பட்டிருக்கிறது.