பக்கம்:ராகுல் சாங்கிருத்யாயன்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

岳榜 ராகுல் சாங்கிருத்யாயன்

தைப் பரிந்து பேசுகிறவர்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்வதோடு, மற்றவர்களேயும் ஏமாற்ற முயல்கிரு.ர்கள் என்ற முடிவுக்கு வருவதில் தமக்கு எந்தவிதமான சந்தேகமும் இல்லை.”

(தர்லன் - திக் தர்ஸன், பக்கங்கள் 5ம் 8ம்).

இந்திய மற்றும் புத்த தத்துவ சிந்தனைகளுக்கு மறுவிளக்கம் தருவதில் மட்டுமின்றி, இந்தோ - சோவியத் கல்விஇயல் பரி மாற்றம் மற்றும் கலாசாரத் தொடர்புகள் ஏற்படுத்துவதிலும், முற்போக்கு சிந்தனை கொள்வதில் ராகுல் சாங்கிருத்யாயன் ஒரு முன்னேடியாக இருந்திருக்கிருர், மிளுயேவ், பாரன்னிக்கோவ், ஷெர்பாத்ஸ்கி போன்ற இந்திய இயலாளர்கள் சோவியத் ரஷ்யா வில் செய்ததை, ராகுல் இந்தியாவிலிருந்து செய்தார். இந்தியா வின் ஆரம்பகால சோஷலிஸ்ட் சுயசிந்தனையாளர்கள், சோவியத் இயலாளர்கள் வரிசையில், ராகுலின் பெயர் எப்போதும் முதலாவ தாக, முன்னணியில் நிலைபெற்றிருக்கும்.

மொழி, இலக்கியம் பற்றிப் பொதுவாகவும், இந்தி, தேவ நாகரி எழுத்துக்கள் பற்றிக் குறிப்பாகவும் அவர் கொண்டிருந்த நோக்குபற்றி முன்னரே குறிப்பிடப்பட்டிருக்கிறது. வட இந்தியா வில் மிகப் பெரும் கருத்து தொடர்பு சாதனமாக எளிய இந்தியை அவர் பரிந்துரைத்தார். ஆங்கிலம் அல்லது வேறு எந்த அந்நிய மொழியையும் அவர் எதிர்க்கவில்லை; ஆனல், இந்திய மொழிகள் மீது அவை காட்டுகிற ஆடம்பரப் போக்கையும் மேலாதிக்கத்தை யும் அவர் எதிர்த்தார். அது இயற்கைக்கு மாருன நிலைமை என்பது அவரது கருத்து. எனினும், இந்தி இலக்கியத்தின் குறுகிய வரம்புகளை அவர் உணர்ந்தே இருந்தார். இந்தியில் நாடகம் (1948 வரை) மிகவும் வளர்ச்சி குன்றிய இலக்கிய வகை யாக இருக்கிறது என அவர் நினைத்தார். அறிவியல் இலக்கியத்தில் இந்தி இதர மொழிகளைவிடப் பின்தங்கி நிற்கிறது. இந்தி இலக் கனத்தை எளிமைப்படுத்துவதை அவர் ஆதரித்தார். பாணினி தனது சம்ஸ்கிருத இலக்கணத்தில் அநேக உடிச்சி மற்றும் பிராதிசி வடிவ வேற்றுமைகளே ஏற்றுக்கொள்ள நேரிட்டதை அவர் தனக்கு சான்ருக எடுத்துக்காட்டினர். தேவநாகரி எழுத் துக்களை மோனே-லேன் அச்சமைப்புக்குஏற்றபடி மாற்றி அமைக்க வேண்டும் என்பதில் அவர் தீவிரமான ஆர்வம் கொண்டிருந்தார். இந்தியும் தேவநாகரியும் வெகுவேகமாக முன்னேறவேண்டும் என அவர் விரும்பினர். -

இலக்கிய விமர்சன விஷயங்களில், வளர்ச்சி பெற் றுவரும் மக்களின் பெருவாரியான தேவைகளை மையமாக்கி சமூக ரீதியில் பயன்படக்கூடிய முற்போக்கு இலக்கியத்தையே அவர் ஆதரித் தார். தந்தக் கோபுரத்திற்குள் அடங்கி, தேர்ந்தெடுத்த உயர்