பக்கம்:ராகுல் சாங்கிருத்யாயன்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கிய சாதனைகள் $1#

வான ஒரு சிலருக்கு மட்டுமே உபயோகப்படக்கூடிய கலையையும் இலக்கியத்தையும் அவர் எதிர்த்தார். கவிதையிலும் கற்பனைப் படைப்புகளிலும் ஸ்தல வர்ணங்களும் வட்டார வழக்குகளும் இடம்பெறவேண்டியது அவசியம் என்று அவர் வலியுறுத்தினர். இதுபற்றி ஒரு இடத்தில் அவர் இவ்வாறு எழுதியுள்ளார்: "இந்தி இலக்கியத்தில் பல வி த மாறுபாடுகள் காணப்படுவதில்லை. ஏனெனில், இந்தி எழுத்தாளர்கள், அவர்கள் பீகாரின் நெல்வயல் கள் அ ல் ல து சமவெளிகளிலிருந்து வந்தவர்களாஞலும், கார்வாவின் பைன் மரங்கள் அடர்ந்த இமாலயப் பள்ளத்தாக்கு கள் அல்லது மலைப்பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாயினும், மார்வார் பாலைவனங்களையோ, ஜபல்பூரின் விந்தியமலைக் காடு களையோ சேர்ந்தவர்களாக இருப்பினும், எல்லோருமே எந்த ஸ்தலத்தின் காட்சிகளை அல்லது இயற்கை வர்ணனைகளைத் தங்கள் கவிதைகளிலும், உரைநடைப் படைப்புகளிலும் புகுந்து விட அனுமதிப்பதில்லை என்று மவுனமான ஒரு சதித்திட்டமும் ரகசிய ஒப்பந்தமும் செய்திருப்பதாகத் தோன்றுகிறது' (சாகித்திய நிபந்தாவளி, பக். 9).

அவர் தெளிவான வார்த்தைகளில் சொல்லியிருக்கிருர்: "ஒரு முற்போக்கு எழுத்தாளன் எந்த மத நம்பிக்கை அல்லது குறுகிய குழுவையும் சார்ந்தவன் இல்லை. மூடுண்ட பாதைகளைத் திறந்து அவற்றை விசாலப்படுத்துவதே முற்போக்கு இயலின் நோக்க மாகும். முற்போக்கு இயல் ஒரு கலைஞனின் சுதந்திரத்துக்கு எதிரி அல்ல; அவனுடைய அடிமைத்தனத்திற்கும் கட்டுண்ட நிலைக் குமே எதிரியாகும்.’’

அவருடைய பார்வையில், முற்போக்கு எழுத்தாளன் மக்களின் எழுத்தாளனே யாவான். அவன் மக்களின் மொழியை உபயோ கிப்பான்; மக்களின் தேவைகளே எடுத்துச் சொல்வான். 'ஒரு எழுத்தாளன் மிகுந்த பலசாலி; மக்களுடன் சேர்ந்து போராடும் சகா. அவனே அவர்களின் தலைவனும்கூட. அவனே போர் வீரனாகவும் படைத்தளபதியாகவும் இருக்கிருன். ஆகவே, அவன் தன்னே எப்போதும் சாதாரண மனிதளுேடு ஒருங்கிணைந்தவ ஞகவே கருதவேண்டும்.'

இத்தகைய சிந்தனையாளர், இயல்பாக, கலை கலைக்காகவே' என்ற போக்கிற்கு எதிராக இருந்தார். மக்கள் கலை, மக்கள் இசை, மக்கள் நாட்டியம் ஆகியவற்றை அவர் ஆதரித்தார். நாட்டு மக்களின் கலை வடிவங்கள் வெறும் காட்சிப் பொருள் களாகவோ, நகர மக்களின் பொழுதுபோக்கு சாதனங்களாக மட்டுமோ இருப்பதை அவர் விரும்பியதில்லை. கலை, அவர் கருத் தின்படி, பயனுள்ளதாக இருக்கவேண்டும்; ஏழை எளியவர்களை