பக்கம்:ராகுல் சாங்கிருத்யாயன்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

恩盛 ராகுல் சாங்கிருத்யாயன்

அநியாயமான ஆட்சி முறையை அவர் பூசி மெழுகாத வார்த்தை களில் கடுமையாகக் கண்டித்துக்கொண்டிருக்கிரு.ர். அவர் சோஷ லிசம் பற்றியும் பேசுகிருர்; ஆனல் சத்தியத்தையும் அகிம்சையை யும் மிக அதிகமாக வலியுறுத்துகிரு.ர். உண்மையான சோஷலிஸ்ட் எவனும் சத்தியத்தின் விரோதியாக இருக்கமுடியாது; எந்த ஒரு சோஷலிஸ்டும் வன்முறையை வன்முறைக்காக விரும்புவதும் இல்லை. உண்மையில், ஒரு சோஷலிஸ்ட் அல்லது கம்யூனிஸ்ட் தற்காப்புக்காக மட்டுமே வன்முறையை ஆதரிக்கிருன்; அதுவும், இதர எல்லாவித அமைதியான எதிர் தாக்குதல் முறைகளும் தோல்வி அடைந்த பிறகு, அல்லது கட்டுப்படுத்தப்பட்ட பிறகே, வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்ட நிலையில்தான், வன்முறையை ஆதரிக்கிருன்.

வருங்காலத்தில், முதலாளித்துவ ஏகபோகவாதிகளையும், கட்டுப்பாடில்லாத உயர் வர்க்கங்களைச் சேர்ந்த அவர்களது சட்ட விரோதமான உதவியாளர்களையும் எதிர்த்து, மாபெரும் போராட்டம் ஒன்று துவங்கப்படும். வர்க்கக் கொடுரங்களைவிட அகிம்சையின் சக்தி மிக வலிமையானது என நான் உறுதியாக தம்புகிறேன். காலாவதியாகிப்போன நிலப்பிரபுத்துவத்தை, ஒரு சொட்டு சத்தமும் சிந்தாமல், காந்தி ஒழித்துக்கட்டுவார். நமக்கு வெகு குறைவான காலமே இருக்கிறது. அவர் நீண்ட ஆயுளுடன் இருக்கவேண்டும் என நாம் விரும்புகிருேம். எனினும் அவருடைய கால அளவுக்கும் ஒரு வரம்பு உண்டு. அவர் நமக்கு அரசியல் சுதந்திரம் பெற்றுத் தந்தார். பொருளாதார சமத்து வத்திற்கும் அவரே நம்மை இட்டுச் செல்லட்டும். இக் கடமையில் அவர் வெற்றிபெற்ருல், வரலாறும் மனிதகுலமும் என்றும் அவரை நினைவில் நிறுத்திப்போற்றும். அப்போது அவர் புத்தரைவிடப் பெரியவராக விளங்குவார்.'

(அதித் ஸே வர்த்தமான், பக்கங்கள் 120-23)