பக்கம்:ராகுல் சாங்கிருத்யாயன்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புகழ் பெற்ற வரலாற்று ஆசிரியர் காசிபிரசாத் ஜெய்ஸ்வால், ராகுல் சாங்கிருத்யாயனே புத்தருடன் ஒப்பிட்டார். ராகுலின் ஆளுமை, அவரது சாதனைகளைப்போலவே, நினைவில் பதியக் கூடியதும் மறக்கமுடியாததும் ஆகும். அவர் பரந்த பயனங்களை மேற்கொண்டார். இந்தி, சம்ஸ்கிருதம், போஜ்புரி, பாவி, திபெத் ஆகிய ஐந்து மொழிகளில் எழுதிஞர். சுயசரிதை , வாழ்க்கை வரலாறு, பயண நூல் சமூக இயல் வரலாறு, தத்துவம், புத்த தர்மம், திபெத் - இயல், அகராதி தயாரிப்பு, இலக்கணம், மூலநூல் பதிப்பித்தல், ஆய்வு, நாட்டியல் கலைகள், அறிவியல், கற்பனைப் படைப்பு நாடகம், அரசியல் மற்றும் துண்டுப் பிரசுரங் களுக்குக் கட்டுரைகள் என அவர் வெளியிட்டுள்ள நூல்கள் பலவகைப்பட்டன ஆகும்.

பிரபாகர் மாச்வே 1944ல் ராகுல் சாங்கிருத்யாயளுேடு நெருங்கிய தொடர்புகொண்டார். 1963ல் ராகுல் மர ண ம் அடைகிற வரையில் அவருடைய நண்பராக இருந்தார். இந்த வர லாற்றில், மாச்வே ராகுலின் வாழ்க்கைச் சுருக்கத்தைத் தருவ துடன், இந்திய இலக்கியத்தில் ராகுலின் சாதனைகளை நாம் அறிந்து பாராட்டுவதற்கும் ஆவன செய்துள்ளார்.

அட்டை அமைப்பு: சத்தியஜித் ரே

உருவ ஒவியம்: எ. தெவி off. 5