பக்கம்:ராஜாம்பாள்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவிந்தனும் கோபாலனும் 97

வெளியே பூட்டியிருந்ததால் அங்கிருந்த வேலைக்காரி யின் பேரைச் சொல்லி ஐந்து நிமிஷம் வரைக்கும் அழைத் தும் யாரும் பதில் பேசாததால், ஓடிவந்து அவள் படுக்கையறைக்குப் போய்த் தண்ணிர் கொண்டுவந்து முகத்தில் தெளித்தும், பிரக்ஞை வராததால் அங்கே இருந்த ஒரு விசிறியைக் கொண்டு கொஞ்சநேரம் விசிறின தன் பேரில், கண்ணேத் திறந்து பார்த்தாள். அப்பால் கொஞ்ச நேரம் பொறுத்து மிகுந்த வருத்தத்துடன் எழுந்து உட்கார்ந்தாள். உடனே எனக்கு அவசரமான வேலை இருப்பதால் நான் போகவேண்டும் என்றேன். அதற்கு அவள், கோபாலா, நீ இன்று எனக்குக் கொடுத்த மறு மொழியால் எனக்கு வியாதி ஏற்பட்டுவிட்டது. நீ எப்படிக் கல்யாணஞ் செய்துகொண்டால் ராஜாம்பாளே மட்டும் செய்து கொள்வாய் என்றும், வேறொருவரைக் கல் யாணஞ் செய்துகொள்ள மாட்டாய் என்றும், உறுதி யாய்ச் சொன்னயோ, அப்படியே நானும் கல்யாணஞ் செய்து கொண்டால் உன்னைமட்டுஞ் செய்துகொள்வேனே தவிர மற்றப்படி வேறு ஒருவரையுங் கல்யாணஞ் செய்து கொள்ள மாட்டேன். இது சத்தியம். நாளடைவில் இப்போது கல்லாயிருக்கப்பட்ட உன் மனம் இரங்குமே யல்லாது இப்படியே இருக்காதென்ற ஒரு நம்பிக்கையால் தான் என் பிராணனை வைத்துக்கொண் டிருக்கிறேன். இல்லாவிட்டால் இன்றே உன் கண்முன்பாக நாக்கைப் பிடுங்கிக்கொண்டு இறந்துபோவேன். இதை உன் மனத் தில் வைத்துக்கொண்டு உன் இஷ்டம் எப்படியோ அப் படிச் செய்துகொள்’’ என்று சொல்லி அங்கே இருந்த ஒரு மணியை அடித்தாள். உடனே கதவைத் திறந்து கொண்டு இரண்டு வேலைக்காரிகள் ஓடிவந்தார்கள். நான் அவளிடம் விடை பெற்றுக்கொண்டு, அதிக வருத்தத் துடன் வீட்டிற்குச் சென்றேன்.

அன்றிரவு எப்படி இருக்கிருளோ என்றும் அந்தத் தெருவழியாய்ப் போனல் ஏதாவது விசேஷம் இருந்தால் தெரியுமே என்றும் அந்தத் தெருவின் வழியாய் இரவு பத்து மணிக்குச் சென்றேன். நடேசனைப்போல் ஒர் ஆள் லோகசுந்தரியின் வீட்டிற்குள்ளே போகக் கண்டேன். ஆனால் நன்றாய்ப் பார்த்ததில் நடேசன் அல்ல என்று நிச்ச

7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜாம்பாள்.pdf/101&oldid=684643" இலிருந்து மீள்விக்கப்பட்டது