பக்கம்:ராஜாம்பாள்.pdf/102

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 இராஜாம்பாள்

யித்துக்கொண்டேன். ஏனென்றால், நடையெல்லாம் நடேசனுடையதுபோல் இருந்தாலும் நரைத்த மயிரும், ஒரு சாண் நரைத்த தாடியும் இருந்ததால் வைத்தியளுே என்னவோ என்று நினைத்துக்கொண்டு சும்மா வந்து விட்டேன். அன்று முதல் நான் வெளியிலேயே போகவில் ஆ. ரகசியமாக ஸ்ரீரங்கத்திலிருந்து புரோகிதரை மாத்திரங் கூட்டிக்கொண்டுவந்து வைத் திருந்தேன். ஏனென்றால், நீலமேக சாஸ்திரிக்கு எந்த வேளையில் முகூர்த்தம் வைத் திருந்ததோ அதே முகூர்த்தத்தில் ராஜாம்பாளை நான் கல்யாணஞ் செய்து கொள்ள வேண்டுமென்று தீர்மானஞ் செய்து, எங்களுடைய வீட்டில் பூமிக்குள் யாருக்குந் தெரி யாமலிருக்கும் அறையில் எனக்கு வேண்டிய இஷ்டர் நாலைந்து பேர் முன்னிலையில் கல்யாணம் முடித்துவிட்டுக் சில நாள் பரியத்தம் ராஜாம்பாளே அங்கேயே யாருக்குந் தெரியாமல் வைத்திருப்பதாக உத்தேசித்திருந்தேன்.

நேற்று உலகளந்த பெருமாள் கோவில் தெருவிற்கு ராத்திரி இரண்டு மணிக்கு வரச்சொல்லிக் கடிதம் எழுதி, என் அந்தரங்கமான வேலைக்காரன் ஒருவனிடங் கொடுத்து யாருக்குந் தெரியாமல் ராஜாம்டாள் கையில் கொடுக் கும்படி அனுப்பினேன். அப்பால் இரவு இரண்டு மணிக்கு அங்கே போய்ப் பார்க்கையில் ராஜாம்பாளைக் காணவில்லே. ஏதோ அசந்தர்ப்பத்தால் சற்றுத் தாமத மாக வருவாளென்று மூன்று மணிவரையிலும் பார்த்துக் கொண்டிருந்தேன். மூன்று மணி அடித்த பிற்பாடுகூட அவள் வராமற்போகவே எனக்குச் சந்தேகம் பிறந்து அப்படிப் பார்க்கையில் ஜன்னலில் வெள்ளேயாய் ஒரு கடிதம் தென்பட்டது. அதென்ன என்று சமீபத்திற் போய்ப் பார்க்க ராஜாம்பாள் கையெழுத்தென்று தெரிந்து வாசித்துப் பார்க்கவே, என்ன மோசமோ என்று அந்தக் கடிதத்தைக் கீழே எறிந்துவிட்டுச் சுடலைமாடன் தெருவிற்கு ஒடினேன். அங்கே போய்ப் பார்த்ததும் என் னென்று சொல்லுவேன்! ஒன்றும் தோன்றவில்லை. குத்திக் கொன்ற கட்டாரியை வெளியே எடுக்காமல், நெருப்பால் கொளுத்தப்பட்டிருந்த ராஜாம்பாளின் பிரே தத்தைக் கண்டேன். கட்டாரியை எடுத்துக் கீழே எறிந்து விட்டுப் பிரேதத்தை எடுத்து மார்போடு அணைத்துக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜாம்பாள்.pdf/102&oldid=684644" இருந்து மீள்விக்கப்பட்டது